ETV Bharat / state

“கபாலீஸ்வரர் கோயில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக ஆட்சேபனைகள் பெறப்பட்டதா?” - உயர் நீதிமன்றம் கேள்வி - Kapaleeswarar Cultural Center - KAPALEESWARAR CULTURAL CENTER

Kapaleeswarar Temple Cultural Center: கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில், கோயில் நிதியில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக பொதுமக்களின் ஆட்சேபனைகள் பெறப்பட்டதா என்பது குறித்து விளக்கமளிக்கும்படி, இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Kapaleeswarar Temple Cultural Center Construction Issue Case
சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 2:59 PM IST

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமாக பசுமை வழிச்சாலையில் உள்ள 22.80 கிரவுண்ட் நிலத்தில் (ஒரு கிரவுண்ட் நிலம் என்பது 24,000 சதுர அடி என வரையறுக்கப்படுகிறது) 26.78 கோடி ரூபாய் செலவில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த கலாச்சார மையம் கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி, கோயில் வழிபாட்டாளர்கள் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளை பின்பற்றாமலும், உரிய அதிகாரமில்லாமலும் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், 88 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த நிலத்தில் கலாச்சார மையம் கட்டுவதன் மூலம், ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வாடகை வருவாய் பாதிக்கப்படும். கோயில் நிதி 28 கோடி ரூபாயை கட்டுமானத்துக்கு பயன்படுத்துவதால், ஆண்டுதோறும் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வட்டி வருவாய் பாதிக்கப்படும்.

எனவே, அரசு கலாச்சார மையம் அமைக்க விரும்பினால், அதை கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில், கோயில் நிதியில் அமைக்க முடியாது. அரசு சொந்தமான நிலத்தில் அரசு நிதியில் அமைத்தால் வரவேற்கத்தக்கது. திட்ட அனுமதி இல்லாமல் கலாச்சார மையம் கட்ட முடியாது.

ஆகவே, கலாச்சார மையம் கட்டுமானப் பணிகள் துவங்கியுள்ளதால், அந்த பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். இந்த கட்டுமான பணிகள் சம்பந்தமான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் ஆஜராகி, "அறநிலையத்துறை சட்டப்படி கோயில் நிதியைப் பயன்படுத்துவது தொடர்பாக பொது அறிவிப்பு வெளியிட்டு, பொதுமக்களின் ஆட்சேபனைகள் பெற வேண்டும். ஆனால், இந்த விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை" என வாதிட்டார்.

இதனை அடுத்து, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக உரிய அனுமதிகளைக் கோரி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தை அணுகியுள்ளோம், உரிய அனுமதிகளைப் பெறாமல் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது. மேலும், தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய இந்த மையத்தில் கட்டப்படும் அரங்குகளை வாடகைக்கு விடுவதன் மூலம் கோயிலுக்கு வருவாய் வரும்" என்று எடுத்துரைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சட்டப்படி கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில், கோயில் நிதியில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக பொதுமக்களின் ஆட்சேபனைகள் பெறப்பட்டதா? என்பது குறித்து நாளை (மே 23) விளக்கமளிக்கும்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் பைக்கில் எடுத்துச் சென்ற ரூ.94 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.