ETV Bharat / state

சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற விவகாரம்: மு.க.ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு! - case of Gutka inside Assembly - CASE OF GUTKA INSIDE ASSEMBLY

case of Gutka inside Assembly: சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்து சென்ற வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ஜூலை 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 22, 2024, 3:41 PM IST

சென்னை: கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக் குழு, உரிமை மீறல் நோட்டீசை அனுப்பியது. இந்த நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து உரிமை மீறல் குழு, திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டாவது நோட்டீசையும் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து முந்தைய அதிமுக ஆட்சியில், சட்டமன்ற செயலாளர் மற்றும் உரிமைக் குழு சார்பில் மேல்முறையீட்டு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த, நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு, இன்று (ஜூலை 22) தீர்ப்புக்காக பட்டியலிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜூலை 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 'சாதியற்ற கிறிஸ்தவர்' சான்று கொடுங்க.. செல்போன் டவர் மீது ஏறி ஆர்பிஎப் காவலர் ஆர்ப்பாட்டம்.. அரக்கோணத்தில் பரபரப்பு! - Casteless Christian

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.