திருப்பத்தூர்: திருப்பத்துார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 63 வயது முதியவர், தான் குடியிருக்கும் வீட்டிற்கு அருகே உள்ள தனது மகள் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இந்த நிலையில், நேற்று (மே 14) வழக்கம் போல தனது மகள் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்த சூழலில், அவரது மகளின் வீட்டிற்கு அருகே, அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அந்த சிறுமியிடம் தங்கவேலு பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்ததாகவும், மற்றவர்கள் பார்வைக்கு தாத்தா மற்றும் பேத்தி என்ற உறவில் இருப்பது போன்று அவரது நடவடிக்கை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத நேரமாகப் பார்த்து, தங்கவேலு அந்த 10 வயது சிறுமியை மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று, கை, கால்களைக் கட்டி வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதன் பின்னர், விளையாடச் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால், சிறுமியைத் தேடி அவரது தாயார் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது சிறுமி அழும் குரல் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தங்கவேலு, சிறுமியிடம் அத்துமீறியது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, தங்கவேலுவிடம் இருந்து சிறுமியை மீட்ட அவரது தாயார், இந்தச் சம்பவம் குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், திருப்பத்துார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கவேலுவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: போலீஸ் கெட்டப்பில் போலி சாமியார் சிக்கியது எப்படி? முதியவர்களிடம் 9 சவரன் நகை அபேஸ் - ஈரோட்டில் நடந்தது என்ன?