ETV Bharat / state

800 கிலோ சிறு தானியங்களை கொண்டு பிரதமர் மோடியின் உருவம்! இணையத்தை கலக்கும் சென்னை மாணவியின் வீடியோ - chennai student draw modi in grains - CHENNAI STUDENT DRAW MODI IN GRAINS

Chennai Student Draw PM Modi in Grains: 800 கிலோ சிறு தானியங்களைக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை பிரமாண்டமாக வரைந்து, சென்னைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவி பிரெஸ்லி ஷிக்கைனா சாதனை படைத்துள்ளார்.

சிறு தானியத்தால் ஆன பிரதமர் மோடியின் உருவம்
சிறு தானியத்தால் ஆன பிரதமர் மோடியின் உருவம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2024, 9:37 PM IST

சென்னை: சென்னை கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் செல்வம் - சங்கீராணி தம்பதியினர். இவரது மகள் பிரெஸ்லி ஷிக்கைனா. இவர் தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இவர் ஓவிய கலை மீது ஆர்வம் கொண்டவர். எனவே அதில் சாதனை படைக்க விரும்பியதால், பிரதமர் மோடியின் புகைப்படத்தை வரைய பயிற்சி எடுத்து வந்துள்ளார்.

சிறு தானியத்தால் பிரதமர் மோடியின் உருவத்தை வரையும் பள்ளி மாணவி (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில் நாளை (செப்.17) பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு 600 சதுர அடியில் சிறுதானியம் மூலம் பிரமாண்டமான பிரதமர் மோடியின் உருவத்தை மாணவி பிரெஸ்லி ஷிக்கைனா வரைந்துள்ளார். சுமார் 800 கிலோ சிறுதானியஙகளை கொண்டு காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை என 12 மணி நேரம் வரைந்து சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: 'இப்படி ரீல்ஸ் போட்டால் கேஸ்தான்'.. கோவையில் போலீஸ் ஸ்டேஷன் முன்பு கெத்து வீடியோ போட்ட இளைஞர் கைது!

பிரெஸ்லியின் முயற்சியை கண்டு யுனிகோ உலக சாதனை நிறுவனம் உலக சாதனையாக அங்கீகரித்ததுள்ளது. அதனை தொடர்ந்து யுனிகோ உலகசாதனை நிறுவத்தின் இயக்குனர் சிவராமன் சாதனை படைத்த மாணவிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கவுரவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.