ETV Bharat / state

ரத்தன் டாடா பற்றி சுவாரஸ்யமான 8 தகவல்கள்! மனிதர்களை நேசிக்கும் எளிய நபராக வாழ்ந்தவர்...

இந்திய வர்த்தகத்தின் இமயமும், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்வின் 8 சுவாரசியமான உண்மைகளை இந்த தொகுப்பில் காணலாம்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 12:35 PM IST

Updated : Oct 10, 2024, 2:43 PM IST

ரத்தன் டாடா
ரத்தன் டாடா (Credits- ANI)

சென்னை: இந்தியா வர்த்தகத்தின் இமயமும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா (86), உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டு, ஐசியூவில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், அவர் நேற்று (அக்.9) இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது, ரத்தன் டாடா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: "இந்தியா ஒரு மாபெரும் ஆளுமையை இழந்துவிட்டது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

இந்நிலையில் அவரது வாழ்வின் சுவாரசியமான அறியபடாத 8 உண்மைகளை இந்த தொகுப்பில் காணலாம்.

  1. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, 1937 டிசம்பர் 28 அன்று ரத்தன் டாடா பிறந்தார். இவரது தந்தை நேவல் டாடா இவர் பிரபல தொழிலதிபர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் மகன் ரத்தன்ஜி டாடாவின் தத்தெடுக்கப்பட்ட மகனாவர். இந்த வகையில் ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளு பேரன் ரத்தன் டாடா. ரத்தன் டாடாவின் தந்தை நேவல் டாடா தன்னை தத்தெடுத்து தந்தையான ரத்தன்ஜி டாடாவின் பெயரை தனது மகனான ரத்தன் டாடாவிற்கு சூட்டியுள்ளார்.
  2. கார்னெல் கட்டிடக்கலை பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை (Architecture) இளங்கலை பட்டம் பெற்றவர் ரத்தன் டாடா. பின் 1961ஆம் ஆண்டு டாடா ஸ்டீல் கம்பெனியில் தனது முதல் வேலையை தொடங்கினார்.
  3. ஜே.ஆர்.டி.யின் ஓய்வுக்குப் பிறகு 1991ஆம் ஆண்டில் டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா பொறுப்பேற்றார். வழக்கமான தொழிலதிபர்கள் போல் சொத்துகளை சேர்ப்பதிலும், சாம்ராஜியத்தை விரிவாக்குவதிலும் டாடா ஆர்வம் காட்டவில்லை. பதிலாக கவனத்துடன் பணத்தை ஈட்டி சமூக பணிகளை மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினார். மனிதர்களை நேசிக்கும் பண்புள்ளவராக இருந்தார்.
  4. 1990 முதல் 2012 வரை டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா பதவி வகித்தார். பின்னர் அவர் 2016 அக்டோபர் முதல் 2017 பிப்ரவரி வரை டாடா குழுமத்தின் இடைக்காலத் தலைவராக இருந்தார்.
  5. ரத்தன் டாடா தலைமையில், டாடா குழுமம் டெட்லி (Tetley), ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover) மற்றும் கோரஸ் ( Kores )நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்டன. டாடா குழுமத்தை இந்திய அளவில் இருந்து உலகளாவிய வணிக நிறுவனமாக கொண்டு போனவர் ரத்தன் டாடா.
  6. டாடா தனது வருமானத்தில் சுமார் 60-65% பங்கை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியவர். விக்கிப்பீடியாவின் தரவுபடி, ரத்தன் டாடா வழிநடத்திய 21 ஆண்டுகளில், டாடா குழுமத்தின் வருவாய் 40 மடங்கு அதிகமானதோடு 50 மடங்குக்கும் மேல் வர்த்தக நிறுவனங்களை தொடங்கவும் காரணமாக இருந்தார்.
  7. 2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருது பெற்றவர் ரத்தன் டாடா.
  8. ரத்தன் டாடா அறிவார்ந்த வளர்ச்சியையும் இளைஞர்களின் முன்னேற்றத்திலும் ஆர்வம் காட்டியவர். இதனால்தான் அவர் மறையும் வரை, சுமார் 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 10, 2024, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.