சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயிலில் கடத்திவரப்படும் பொருட்கள் குறித்தான சோதனை நடைபெற்றது. அதில் தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயில் வண்டியில் வந்த பயணிகளை சோதனை செய்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக நடைமேடையில் ஒரு சூட்கேஸ் கேட்பாரற்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே நேற்றைய தினம் துரைப்பாக்கம் பகுதியில் சாலையில் வீசப்பட்ட சூட்கேஸில் பெண் சடலம் இருந்த நிலையில், பதறிப் போன பாதுகாப்பு படையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் சூட்கேஸில் என்ன உள்ளது என்பது குறித்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: புதுப்பொலிவு பெறும் ஊட்டி ரயில் நிலையம்.. மேம்பாட்டு பணிகள் தீவிரம்!
இந்நிலையில் இந்த சூட்கேஸை திறந்து பார்த்த அதிகாரிகள் அதில் கஞ்சா மூட்டைகள் இருப்பதை கண்டனர். மேலும் அதை ஆய்வு செய்ததில் சுமார் 14 கிலோ எடையுள்ள கஞ்சா இருப்பதை அறிந்தனர். இது குறித்த விசாரனையில் இறங்கிய ரயில்வே போலீசார் இதை கடத்தி வந்த நபர்கள் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொள்வதை கண்டு அங்கு விட்டு சென்றுள்ளனர் என தெரிவித்தனர். மேலும் 14 கிலோ கஞ்சாவினை பெரிய மேடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் கஞ்சாவை வீசி விட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.