ETV Bharat / state

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களில் 13 பேர் சென்னை வந்தடைந்தனர்! - uttarakhand landslide

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2024, 3:17 PM IST

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களில் 13 பேர் விமான மூலம் சென்னை வந்தடைந்தனர். மற்ற 17 பேரும் அரசு சார்பில் ரயில் மூலம் சென்னை அழைத்து வரப்பட உள்ளனர்.

சென்னை வந்தடைந்த 13 தமிழர்கள்
சென்னை வந்தடைந்த 13 தமிழர்கள் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து கடந்த 1 ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் கொண்ட பக்தர்கள் குழு உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு ரயிலில் யாத்திரை சென்றுள்ளனர். ஆதி கைலாஷ் பகுதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது தாவகட் என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதில் சாலைகள் துண்டிக்கப்பட்டு அங்கிருந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அனைவரும் சிக்கித் தவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த தமிழ்நாடு அரசு, உத்தரகாண்ட் அரசுடன் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் அவர்களை காப்பாற்றி டார்ஜூலா பகுதிக்கு அழைத்து வந்தது.

இதன் பின்பு அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அரசு செலவில் 30 பேரும் இன்று (செப்.17) ரயில் மூலம் சென்னை அழைத்து வரப்பட இருந்தனர். இந்த நிலையில், அதில் 13 பேர் தங்களது சொந்த செலவில் விமானம் மூலம் சென்னை வந்தடைந்துள்ளனர். மற்ற 17 பேரும் அரசு சார்பில் ரயில் மூலம் சென்னை அழைத்துவரபட உள்ளனர்.

சென்னை விமான நிலையம் வந்தவர்களை அவர்களின் உறவினர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், "100 அடி உயரத்தில் இருந்து நிலச்சரிவு ஏற்பட்டது அதை நேரடியாக பார்த்தபோது பதற்றமாக தான் இருந்தது.

மூன்று நாட்களாக மின்சாரம் இல்லாமல் செல்போன் பயன்படுத்த முடியாமல் மிகுந்த சிரமத்தில் ஆசிரமம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தோம். அதனைத் தொடர்ந்து, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துவரப்பட்டு, விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து அடைந்துள்ளோம்.

ராணுவ அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு அனைவரையும் பாதுகாத்தனர். மேலும், தமிழ்நாடு அரசு அனைவரையும் மீட்ட பின்னர் உணவு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் என அனைவருக்கு உதவி செய்தது. அதன் தொடர்ச்சியாக அனைவரையும் இலவசமாக ரயிலில் அழைத்து வர நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

இதுமட்டும் அல்லாது, நிலச்சரிவு தகவல் பெறப்பட்டதும் உடனடியாக துரிதமாக நடவடிக்கை மேற்கொண்ட மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.