ETV Bharat / sports

டாஸ் வென்று பெங்களூரு பேட்டிங் தேர்வு! தொடர் தோல்விகளில் இருந்து மீளுமா பெங்களூரு? - IPL2024 SRH vs RCB Match Highlights - IPL2024 SRH VS RCB MATCH HIGHLIGHTS

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளது.

IPL RCB vs SRH
IPL RCB vs SRH
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 7:03 PM IST

Updated : Apr 25, 2024, 7:10 PM IST

ஐதராபாத் : 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.25) இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் 41வது லீக் ஆட்டத்தில் சன்ரைசஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளெசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பெங்களுரூ அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களில் 1ல் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்று உள்ளது. மீதமுள்ள 7 ஆட்டங்களிலும் அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

கடைசியாக கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அதிர்ச்சி தோல்வியை தழுவியது. பெங்களூரு அணியை பொறுத்தவரை தொடக்க வீரர் விராட் கோலி, கேப்டன் பாப் டு பிளெசிஸ், வில் ஜேக்ஸ், ரஜத் படிதர், மிடில் வரிசையில் தினேஷ் கார்த்திக் என பேட்டிங் வலிமையாக காணப்பட்டாலும் பந்துவீச்சு தான் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

கொல்கத்தா அணிக்கு எதிரான அட்டத்தில் மட்டும் யாஷ் தயால், முகமது சிராஜ், லாக்கி பெர்குசன் ஆகியோர் 40 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்து எதிரணி 200 ரன்களை எளிதில் கடக்க உதவினர். இனி வரும் ஆட்டங்களில் ஒன்றில் கூட தோல்வியை கண்டிராமல் தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றை நினைத்து பார்க்கக் கூடிய சூழலில் பெங்களூரு அணி உள்ளது.

மற்றொரு புறம் சன்ரைசஸ் ஐதராபாத் அணி நடப்பு சீசனில் வெளுத்து வாங்கி வருகிறது. மூன்று முறைகளுக்கு மேல் 200 ரன்களை கடந்து பேட்டிங்கில் ஐதராபாத் அணி வலுவாக காணப்படுகிறது. அதேபோல் பந்துவீச்சை பொறுத்தவரையிலும் ஐதராபாத் அணி வலிமையாகவே உள்ளது.

கடைசியாக டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக வீரர் நடராஜன் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். நடப்பு சீசனில் வெற்றி வாகை சூடி வரும் ஐதராபாத் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது பெங்களூரு அணிக்கு சாதாரண விஷயம் அல்ல. வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் :

பெங்களுரு ராயல் சேலஞ்சர்ஸ் : பாப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, லாக்கி பெர்குசன், யாஷ் தயாள், முகமது சிராஜ்.

சன்ரைசஸ் ஐதராபாத் : அபிஷேக் சர்மா, எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்.

இதையும் படிங்க : "உலக செஸ் சாம்பியன் தொடருக்கான பயிற்சி எப்போது?" - கிராண்ட்மாஸ்டர் குகேஷ் பேட்டி! - Indian Grandmaster Gukesh

Last Updated : Apr 25, 2024, 7:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.