கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகள் இடையே நேற்று (ஆக.2) நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது. இருப்பினும், வெற்றியாளரை தேர்வு செய்ய சூப்பர் ஓவர் முறை நேற்று கடைபிடிக்கப்படவில்லை. பலருக்கு எழுந்த சந்தேகம் ஏன் சூப்பர் ஓவர் நேற்று கடைபிடிக்கப்படவில்லை என்பது தான்.
Things went down to the wire in Colombo as the match ends in a tie!
— BCCI (@BCCI) August 2, 2024
On to the next one.
Scorecard ▶️ https://t.co/4fYsNEzggf#TeamIndia | #SLvIND pic.twitter.com/yzhxoyaaet
அதற்கான காரணத்தை ஐசிசியின் விதிமுறைகள் புத்தகம் கூறுகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசியின் விதிமுறைகளின் படி லிமிடெட் ஓவர்கள் அதாவது குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மட்டுமே வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியாத பட்சத்தில் சூப்பர் ஓவர் கடைபிடிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறையை கொண்டு வரலாம் என ஐசிசி விதிமுறையில் கூறப்படவில்லை. அதேநேரம் டி20 கிரிக்கெட் போட்டிகள் சமனில் முடிந்தால் அப்போது சூப்பர் ஓவர் கடைபிடிக்க ஐசிசி அனுமதித்து உள்ளது. அதேநேரம் 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டதே என்ற கேள்வி எழலாம்.
அதற்கும் ஐசிசியின் விதிமுறை புத்தகம் விளக்கம் தருகிறது. அதன்படி இரு நாடுகள் மட்டும் பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் என்பது அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் முடிவெடித்து இருதரப்பு போட்டிகளை நடத்துகின்றன. அதில் ஒரு ஆட்டம் சமனில் முடிந்தால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்க வேண்டியதில்லை.
A thrilling start to the #SLvIND ODI series.
— BCCI (@BCCI) August 2, 2024
The First ODI ends in a tie.
Scorecard ▶️ https://t.co/4fYsNEzggf#TeamIndia pic.twitter.com/ILQvB1FDyk
அதேநேரம் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதிய ஒருநாள் உலக கோப்பை ஐசிசி நேரடியாக நடத்தும் போட்டியாகும். இதில் வெற்றி தோல்வி குறித்து நிச்சயம் அறிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் அந்த ஆட்டத்தில் மட்டும் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. மற்ற 20 ஓவர் போட்டிகளில் மட்டுமே சூப்பர் ஓவர் முறையை அமல்படுத்த ஐசிசி அனுமதிக்கிறது.
சூப்பர் ஓவர் பிறந்த கதை:
சூப்பர் ஓவருக்கும் இந்தியா - பாகிஸ்தானுக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. சொல்லப் போனால் சூப்பர் ஓவர் என்பது இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின் மூலமாகவே அறிமுகமானது. கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் விளையாடிய ஆட்டம் சமனில் முடிந்தது.
WE HAVE A TIE IN COLOMBO 🙌
— ICC (@ICC) August 2, 2024
Two wickets in two balls for skipper Charith Asalanka as the match ends with scores level.
📝 #SLvIND: https://t.co/ZrezKLA1h4 pic.twitter.com/2FwMR5Q0gM
இந்த ஆட்டத்தில் வெற்றி தோல்வி கட்டாயம் கண்டறிய வேண்டும் என்ற காரணத்தில் இரு அணிகள் தரப்பிலும் தலா ஒரு ஓவர் போடப்பட்டு வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டார். அதான் கிரிக்கெட் வரலாற்றில் போடப்பட்ட முதல் சூப்பர் ஓவர், காலப் போக்கில் சூப்பர் ஓவரின் வடிவம் மாற்றப்பட்டு, சூப்பர் ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே உண்டு உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன.
இதையும் படிங்க: தரவரிசை மூலம் தகுதியானதால் தோல்வியா? ஒலிம்பிக் 5000மீ இந்தியாவின் சொதப்பலுக்கு என்ன காரணம்? - Paris Olympics 2024