ETV Bharat / sports

அப்போ இந்தியா டீமோட புது கோச் கவுதம் கம்பீர் இல்லையா? - பிசிசிஐ அதிரடி முடிவு! - INDIA VS ZIMBABWE T20 SERIES

INDIA VS ZIMBABWE T20 SERIES: இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 தொடரில் இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார்.

விவிஎஸ் லஷ்மண் புகைப்படம்
விவிஎஸ் லஷ்மண் புகைப்படம் (Credits - ANI)
author img

By ANI

Published : Jul 3, 2024, 5:02 PM IST

ஹராரே: டி20 உலகக்கோப்பையை இரண்டாவது முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணி அடுத்ததாக ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஜூலை 6ஆம் தேதி ஹராரேவில் தொடங்குகிறது. தொடர்ந்து ஜூலை 7, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மற்ற நான்கு டி20 கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற உள்ளன.

இத்தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட அணியின் மூத்த வீரர்களுக்கு ஒய்வு அளிக்கப்பட்டு ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், நிதிஷ், ரியான் பராக், அபிஷேக் சர்மா, துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட இளம் வீரர்களுடன் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளில் ஏற்பட்டுள்ள புயலின் காரணமாக ஜெய்ஸ்வால், சிவம் துபே, சாம்சன் உள்ளிட்ட வீரர்கள் ஜிம்பாப்வே அணிக்கான முதல் இரு டி20 போட்டிகளில் பங்கேற்காத சூழலில் அவர்களுக்கு மாற்று வீரர்களாக தமிழகத்தை சேர்ந்த் சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா, ஹர்சித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இத்தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் விவிஎஸ் லஷ்மண் நியமிக்கப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட்டின் ஓய்விற்கு பின்பு இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்பதாக இருந்தது. இந்நிலையில் ஜிம்பாப்வே தொடர் முடிந்ததும் இலங்கை அணிக்கு எதிரான தொடர்களில் இந்தியா பங்கேற்க உள்ளது.

அந்த தொடரில் இருந்து தான் கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அனுபவம் வாய்ந்த விவிஎஸ் லஷ்மண் இந்தியாவிற்காக 134 டெஸ்ட் போட்டிகள், 86 ஒருநாள் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் சாய் சுதர்சன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.