ETV Bharat / sports

இந்திய பாராலிம்பிக் கமிட்டி சஸ்பெண்ட் - மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிரடி - என்ன காரணம்? - India Paralympic committee suspends

Sports ministry suspended Paralympic committee of India: இந்திய பாராலிம்பிக் கமிட்டை இடைநீக்கம் செய்து மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

Sports ministry suspended Paralympic committee of India

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 10:37 PM IST

டெல்லி : கெடு விதிக்கப்பட்ட காலத்திற்குள் கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தலை நடத்தி முடிக்காத காரணத்திற்காக இந்திய பாராலிம்பிக் கமிட்டியை இடைநீக்கம் செய்து மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேசிய விளையாட்டு ஆணையத்தால் அங்கீகரிப்பட்டு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் இயங்கி வருகிறது இந்திய பாராலிம்பிக் கமிட்டி. தேர்தல் மூலம் பாராலிம்பிக் கமிட்டி நிர்வாக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்தல் வாயிலாக தேர்வு செய்யப்படும் கமிட்டியின் ஆயுட்காலம் என்பது 4 ஆண்டுகள் ஆகும்.

கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், பல்வேறு சட்ட பிரச்சினைகளால் முடிவுகள் வெளியிடப்படவில்லை. கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதியுடன் பழைய உறுப்பினர் கமிட்டியின் பொறுப்பு காலம் நிறைவு பெற்ற போதிலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து புதிய நிர்வாக கமிட்டியை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி கடந்த ஜனவரி 22ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி வரும் மார்ச் மாதம் 28ஆம் தேதி புதிய நிர்வாக கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தல் பெங்களூருவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே பழைய நிர்வாக குழுவின் பதவிக் காலம் நிறைவு பெற்ற நிலையில், புதிதாக தேர்தல் நடத்த இந்திய பாராலிம்பிக் கமிட்டி ஏறத்தாழ 2 மாதங்கள் எடுப்பது அமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைகளை மீறிய செயல் என்றும் சொந்த அரசியல் அமைப்பு மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விதிமுறைகளை மீறியது என்றும் மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து இந்திய பாராலிம்பிக் கமிட்டியை இடைநீக்கம் செய்து மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

இதையும் படிங்க : இண்டிகோ விமான ஊழியர்களால் கசப்பான நிகழ்வு - பாரா விளையாட்டு வீராங்கனை சுவர்னா ராஜ் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.