ETV Bharat / sports

சூப்பர் 8 சுற்று:தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டாஸ் வென்ற அமெரிக்கா பந்துவீச்சு தேர்வு..! - T20 WORLD CUP 2024 - T20 WORLD CUP 2024

USA vs SA T20 World Cup 2024: சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா - அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

அமெரிக்கா அணி வீரர்கள் கோப்புப் படம்
அமெரிக்கா அணி வீரர்கள் கோப்புப் படம் (Credit - AP PHOTOS)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 19, 2024, 7:57 PM IST

Updated : Jun 19, 2024, 8:08 PM IST

ஆன்டிகுவா: ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. 20 அணிகள் பங்கேற்ற நடப்பு உலகக் கோப்பை தொடரில் 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு அதாவது 'சூப்பர் 8' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. குரூப் 1ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் 2ல் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த நிலையில் இன்று சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் அமெரிக்கா- தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.

ஆன்டிகுவா நார்த் சவுண்ட்டில் உள்ள 'சர் விவியன் ரிச்சர்ட்ஸ்' மைதானத்தில், இந்த போட்டியானது இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கியது. முன்னதாக, டாஸ் வென்ற அமெரிக்கா அணி கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இரு அணி வீரர்கள்:

அமெரிக்கா அணி: ஷயான் ஜஹாங்கீர், ஸ்டீவன் டெய்லர், ஆண்ட்ரீஸ் கௌஸ்(விக்கெட் கீப்பர்), ஆரோன் ஜோன்ஸ் (கேப்டன்), நிதிஷ் குமார், கோரி ஆண்டர்சன், ஹர்மீத் சிங், ஜஸ்தீப் சிங், நோஸ்துஷ் கென்ஜிகே, அலி கான், சவுரப் நெட்ரவால்கர்

தென்னாப்பிரிக்க அணி: குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீசா ஹென்ட்ரிக்ஸ், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, தப்ரைஸ் ஷம்சி.

இதையும் படிங்க: கேப்டன் பொறுப்பில் இருந்து விலகல்.. ஒப்பந்தமும் நிராகரிப்பு.. கேன் வில்லியம்சன் ஓய்வு முடிவா?

Last Updated : Jun 19, 2024, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.