ஆன்டிகுவா: டெஸ்ட் அந்தஸ்து பெறாத அமெரிக்கா அணியுடன் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியை எதிர் கொண்டது தென்னாப்பிரிக்கா. ஆன்டிகுவா நார்த் சவுண்ட்டில் உள்ள 'சர் விவியன் ரிச்சர்ட்ஸ்' மைதானத்தில், நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் பந்து வீச்சை தேர்வு செய்தது அமெரிக்கா.
அதன்படி முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இதில் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹென்ட்ரிக்ஸ் அவுட் ஆகி வெளியேறினார்.
டி காக் அதிரடி: இதனையடுத்து எய்டன் மார்க்ரம் - டி காக் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை அதிரடியாக உயர்த்தினர். போட்டியின் 12 ஓவரை ஹர்மீத் சிங் வீச அந்த ஓவரில் டி காக் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆரம்பம் முதலே சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் பறக்கவிட்ட அவர், 40 பந்துகளில் 74 ரன்கள் விளாசி இருந்தார்.
இதனையடுத்து, களமிறங்கிய மில்லர் வந்த வேகத்தில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, மற்றொருபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மார்க்ரம் 46 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய கிளாசன் 36 ரன்களும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 20 ரன்களும் விளாசினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது தென்னாப்பிரிக்கா.
அமெரிக்கா அணி தரப்பில் நேத்ராவல்கர், ஹர்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதனையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது அமெரிக்கா. ஸ்டீவன் டெய்லர் - ஏட்ரியஸ் கெளஸ் ஆகியோர் ஓபனிங் பேட்ஸ் மேன்களாக களமிறங்கினர். இதில் 24 ரன்களுக்கு ஸ்டீவன் டெய்லர் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய நிதிஷ் குமார் 8 ரன்களுக்கும், கேப்டன் ஆரோன் ஜோன்சன் ரன் எதும் எடுக்காமலும் வெளியேற, அடுத்து வந்த ஆண்டர்சன் 12, ஷயான் ஜஹாங்கீர் 3 ரன்களுக்கு அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.
இதனால், 76 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது அமெரிக்காவை, சுலபமாக தென்னாப்பிரிக்க வென்றுவிடும் என கணிக்கப்பட்டது. இங்குதான் டிவிஸ்டே இருக்கிறது. ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஏட்ரியஸ் கெளஸ் சிக்ஸர்களை, பவுண்டரிகளையும் பறக்கவிட்டு அதிரடி காட்டினார். அவருக்கு பக்கபலமாக ஹர்மீத் சிங் ஆதரவு அளித்தார்.
ரபாடா அபாரம்: ஒரு கட்டத்தில் 16 பந்துகளில் 48 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. போட்டியின் 18 ஓவரை ஷாம்சி வீச அந்த ஓவரில் ஹர்மீத் சிங் 1 சிக்ஸர், ஏட்ரியஸ் கெளஸ் 2 சிக்ஸர்கள் விளாடியதால் போட்டி இன்னும் சுவாரஸ்யமானது. அதன் பின்னர் 12 பந்துகளில் 28 ரன்கள் தேவை என்ற நிலையிலிருந்தது.
தொடர்ந்து, 19வது ஓவரை ரபாட வீச அந்த ஓவரின் முதல் பந்தில் ஹர்தீப் சிங் விக்கெட் இழந்து இழந்து வெளியேறினார். அதன் பின்னர், களமிறங்கிய பஜாஸ்தீப் சிங்கே இந்த ஓவரில் நான்கு பந்துகளை டாட் ஆக்கினார். இதனால், போட்டி அமெரிக்காவின் கையைவிட்டு சென்றது. கோஸ் 80 ரன்களில் நாட் அவுட்டாக இருந்தும் அமெரிக்கா 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ரபாடாவின் ஓவர்கள் மட்டும்தான் தென்னாப்பிரிக்காவைத் தோல்வியிலிருந்து தப்பிக்க வைத்ததென்றால் மிகையில்லை.
இதையும் படிங்க: கேப்டன் பொறுப்பில் இருந்து விலகல்.. ஒப்பந்தமும் நிராகரிப்பு.. கேன் வில்லியம்சன் ஓய்வு முடிவா?