ETV Bharat / sports

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 3வது பதக்கம்! துப்பாக்கிச் சுடுதல் ஸ்வப்னில் குசலே வெண்கலம்! - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

பாரீஸ் ஒலிம்பிக் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே வெண்கலம் வென்றார்.

Etv Bharat
Swapnil Kusale (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 1, 2024, 2:18 PM IST

பாரீஸ்: 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஆக.1) நடைபெற்ற ஆடவருக்கான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்த போட்டியில் மூன்று வெவ்வேறு விதமான நிலைகளில் இருந்து கொண்டு துப்பாக்கிச் சுட வேண்டும். இதில், இந்திய ஸ்வப்னில் குசலே 451.4 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று தந்த 7வது துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஸ்வப்னில் குசலே என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சிறப்பையும் ஸ்வப்னில் குசலே பெற்றுள்ளார். நடப்பு பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாழில் இந்தியாவுக்கு கிடைத்த 3வது பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முட்டி போட்டுக்கு சுடும் முதல் சுற்றில் சற்று பின்தங்கிய நிலையில் தொடங்கி ஸ்வப்னில் அடுத்த வாய்ப்புகளை சீராக பயன்படுத்திக் கொண்டு தரவரிசையில் முன்னிலை பெற்றார்.

அதன் பின் குப்புறபடுத்த நிலையில் துப்பாக்கிச் சுடும் பிரிவில் தொடர்ந்து 10 ஷாட்டுகளை துல்லியமாக சுட்டு வீழ்த்திய ஸ்வப்னில் தரவரிசையில் முன்னேறி டாப் 5 வரிசைக்குள் நுழைந்தார்.

இறுதியில் மூன்று நிலைகளையும் சேர்த்து ஸ்வப்னில் குசலே 411.6 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். நடப்பு பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. மூன்று பதக்கங்களுடன் சேர்த்து ஒட்டுமொத்த புள்ளிப் பட்டியலில் இந்தியா 41வது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க: பாரீசை கலக்கிய துருக்கி வீரர்.. தலைவன் வேற ரகம் பார்த்து உஷாரு... வைரலாகும் தக் லைப் சம்பவம்! - paris olympics 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.