கொழும்பு: இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் கடந்த ஆக.2ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது. பின்னர், 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த ஆக 4 ஆம் தேதியன்று நடைபெற்றது. அதில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் 3வது ஒருநாள் போட்டி இன்று (ஆக 7) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலன்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் விளையாடியது. 50 ஓவர்கள் முடிவிற்கு 248 ரன்களை குவித்தது.
249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா - சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி இந்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார் சுப்மன் கில்.
பின்னர் களம் கண்ட விராட் கோலி துனித் வெல்லலகே வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதற்கிடையில் களத்தில் இருந்த ரோஹித் சர்மாவும் ஆட்டமிழக்க இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து தங்களது ஆட்டத்தை இழந்தனர்.
இதனால் இந்திய அணி திணறியது. அடுத்து வந்த பண்ட், ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் பட்டேல் ஆகிய மூன்று பேரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க 13 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறியது. களத்தில் ஷிவம் துபே - ரியான் பராக் ஜோடி இருந்தது. இதில், ரியான் பராக் மட்டும் 15 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ஷிவம் துபேவுடன் வாசிங்டன் சுந்தர் கைகோர்க்க இருவரும் நிதானமாக விளையாடினர்.
Sri Lanka win the Third ODI and the series 2-0.
— BCCI (@BCCI) August 7, 2024
Scorecard ▶️ https://t.co/Lu9YkAmnek#TeamIndia | #SLvIND pic.twitter.com/ORqj6aWvRW
இந்நிலையில் வாண்டர்சே வீசிய அபார பந்தில் ஷிவம் துபே எல்பிடபிள்யூ ஆக, குல்தீப் யாதவ் களம் கண்டார். 22வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் சிக்ஸ், பவுண்டரி என மாறி மாறி விளாசி அணிக்கு ரன்களை குவித்தார். 26 ஓவர்கள் முடிவிற்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அபார தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. கடந்த 1997 ஆம் ஆண்டிற்கு பின் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை இலங்கை அணி தோற்கடித்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: இந்தியாவுக்கு 249 ரன் வெற்றி இலக்கு! வெற்றி பெறுமா? - India vs Sri Lanka 3rd ODI