ETV Bharat / sports

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணி மோதல்.. இரண்டாவது இடத்துக்கு சன்ரைசர்ஸ் முன்னேறுமா? - SRH VS PBKS

SRH VS PBKS: ஐபிஎல் தொடரில் இன்று மாலை நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் ஆட்டம் தொடர்பான கோப்பு புகைப்படம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் ஆட்டம் தொடர்பான கோப்பு புகைப்படம் (Credits: ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 19, 2024, 11:33 AM IST

ஹைதராபாத்: இந்தியாவில் கோலாகலமாக நடந்துவரும் ஐபிஎல் தொடரில் லீக் சுற்று தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னதாகவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடம் பிடித்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு 4 வது அணியாகத் தகுதி பெற்றது.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில் இன்று மாலை நடைபெறும் 69வது லீக் ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.

இந்த போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முன்னதாகவே, 15 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதியான நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்றால் இரண்டாம் இடத்துக்கான வாய்ப்பை பெறலாம். அதேபோல, பிளே ஆஃப் சுற்றில் முதல் இரண்டு இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்குத் தோற்றாலும் மற்றொரு வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் அணியைப் பொருத்தவரை, பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், தொடரை வெற்றியுடன் முடிக்கும் நோக்கில் இந்த போட்டியை விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணியில் காயம் காரணமாக, ஷிகர் தவான் மற்றும் காகிசோ ரபாடா விலகியுள்ள நிலையில், டி20 உலகக்கோப்பை பயிற்சிக்காக சாம் கரன், ஜானி பேர்ஸ்டோ மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் தாயகமான இங்கிலாந்திற்கு திரும்பினர். எனவே, இப்போட்டியை ஜிதேஷ் சர்மா அணியை வழி நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்: இரு அணிகளும் இதுவரை 22 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 15 வெற்றிகளையும் பஞ்சாப் கிங்ஸ் 7 வெற்றிகளையும் பெற்றுள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்: ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானம் பொதுவாக பேட்டிங்கிற்கு உதவுவதால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தால் வெற்றியைப் பெறலாம்.

இதையும் படிங்க :திக் திக் நிமிடங்கள்.. பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி தகுதி! இறுதி வரை போராடிய சென்னை அணி தோற்க காரணம்? - CSK Vs RCB

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.