ஐதராபாத்: உலகின் கொடிய நோய்களில் புற்றுநோயும் ஒன்று. கோடிக்கணக்கான மக்கள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பல வகையான புற்றுநோய்கள் குணப்படுத்தக் கூடிய வகையில் இருந்தாலும் இன்னும், சில புற்றுநோய்களுக்கு மருந்து என்பது கண்டுபிடிக்கபடாமலேயே உள்ளதாக மருத்துவ உலகில் கூறப்படுகிறது.
இருப்பினும், குறிப்பிட்ட சிலர் புற்றுநோய்களில் இருந்து மீண்டு வந்தது மட்டுமின்றி பல்வேறு சாதனைகளையும் படைத்து உள்ளனர். அவர்களது வாழ்க்கை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி மற்றவர்களுக்கும் உற்சாகமும் ஊக்கமும் அளிக்கும் வகையில் இருக்கும். அப்படி விளையாட்டு துறையில் இருந்து புற்றுநோய் பாதித்து, அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் பல்வேறு சாதனைகள் புரிந்தவர்கள் குறித்து இந்த செய்தியில் அறிந்து கொள்ளலாம்.
லியாண்டர் பயஸ்: நட்சத்திர டென்னிஸ் வீரர் லியாண்டஸ் பயஸ்க்கு கடந்த 2003ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இடது பக்க மூளையில் 4 சென்டி மீட்டர் அளவில் ஏற்பட்ட இன்பக்ஷன் காரணமாக அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இருப்பினும் அதில் இருந்து குணமடைந்த லியாண்டர் பயஸ் 2004ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதி போட்டி வரை சென்று மைல்கல் படைத்தார்.
யுவராஜ் சிங்: இந்திய கிரிக்கெட் அணி 2007 மற்றும் 2011ஆம் ஆண்டு உலக கோப்பைகளை வெல்ல முக்கிய காரணியாக இருந்தவர் யுவராஜ் சிங், நுரையீரல் புற்றுநோயால் பாதித்த யுவராஜ் சிங், அதில் இருந்து மீண்டு வந்து கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய அணிக்காக மீண்டும் விளையாடினார். தற்போது YouWeCan என்ற தொண்டு அமைப்பை தொடங்கி அதன் மூலம் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை பெற யுவராஜ் சிங் உதவி வருகிறார்.
Merry Christmas from our Santa family to yours 🎅 Wishing everyone love, laughter, and the warmth of loved ones ❤️ @hazelkeech pic.twitter.com/emeN9ASa2Q
— Yuvraj Singh (@YUVSTRONG12) December 25, 2023
லேன்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங் (Lance Armstrong): அமெரிக்காவை சேர்ந்த பிரபல சைக்கிள் பந்தய வீரரான லேன்ஸ் ஆம்ஸ்ட்ராங் கடந்த 1996ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிப்புக்குள்ளானார். ஆண் உறுப்பில் உருவான புற்றுநோய் மெல்ல நுரையீரல், குடல் மற்றும் மூளை உள்ளிட்ட பகுதிகளுக்கு பரவத் தொடங்கியது.
அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் உயிர் வாழ்வதற்கு 40 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறிய போதிலும் அதிலிருந்து முழுவதுமாக வெளிவந்து கடந்த 1999 மற்றும் 2005ஆம் ஆண்டு மிகப் பெரிய சைக்கிள் பந்தயமான டூர் டி பிரான்ஸ் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைத்தார்.
மேத்யூ வேட் (Matthew Wade): ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் தனது 16வது வயதில் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொண்டார். இரண்டு சுற்றுகளாக கிமோதெரபி மூலம் சிகிச்சை பெற்றுக் கொண்ட அவர், அதன் பின் ஆஸ்திரேலிய அணிக்காக பல வெளிநாட்டு மண்ணில் ரன்கள் குவித்தது உலகறிந்த விஷயம்.
சிம்மொன் ஒ டொன்னல்: (Simon O'Donnell): 1987 உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் சிம்மொன் ஒ டொன்னல் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து மீண்டும் கிரிக்கெட் விளையாடினார். இதில் குறிப்பிடத்தக்க வகையில் கூற வேண்டும் என்றால் 18 பந்துகளில் அரை சதம் விளாசி சிம்மொன் சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து 1993ஆம் ஆண்டு வரை முதல் தர கிரிக்கெட்டில் விளையாடி வந்தார்.
மார்டினா நவ்ரதிலோவா (Martina Navratilova): அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவ்ரதிலோவா மார்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்னர் அதில் இருந்து குணமடைந்தார். தொடர்ந்து தனது 66 வயது வரை டென்னிஸ் விளையாடிய மார்டினா நவ்ரதிலோவா பல்வேறு பட்டங்களை வென்று சாதனை படைத்தார்.
இதையும் படிங்க: "மைதானமா இது.. வாழ்க்கையில இனி இங்க வரமாட்டோம்"- 2வது நாளாக தொடரும் சோகம்! - Afg vs NZ Test Cricket