ETV Bharat / sports

ஒலிம்பிக்கில் நுழைவதே இலக்கு.. தென்தமிழக தங்க மங்கைகள் உணர்வுப்பூர்வ பகிர்வு! - South Asian Junior Athletics Games - SOUTH ASIAN JUNIOR ATHLETICS GAMES

ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் ஒலிம்பிக் ஆகிய போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்காக தங்கம் வெல்வதே கனவாக இருப்பதாக தெற்காசிய ஜூனியர் தடகள போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகள் அபிநயா மற்றும் டீனா ஆகியோர் ஈடிவி பாரத் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

தெற்காசிய ஜூனியர் தடகள போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகள்
தெற்காசிய ஜூனியர் தடகள போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 14, 2024, 5:41 PM IST

சென்னை: தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியானது, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 13ஆம் தேதி நிறைவு பெற்றது. இப்போட்டியில், இந்தியாவில் இருந்து 62 வீரர்களும், இலங்கையில் இருந்து 54 வீரர்களும், பாகிஸ்தானில் இருந்து 12 வீரர்களும், பூட்டானில் இருந்து 5 வீரர்களும், நேபாளில் இருந்து 9 வீரர்களும், பங்களாதேஷில் இருந்து 16 வீரர்களும் மற்றும் மாலத்தீவில் இருந்து 15 வீரர்கள் என தெற்காசியாவின் 7 நாடுகளில் இருந்து மொத்தம் 173 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்தியா சார்பில் கலந்துகொண்ட 62 பேரில் 9 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆவர். இந்நிலையில், இப்போட்டி நேற்று நிறைவு பெற்ற நிலையில், 21 தங்கம், 22 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கங்களை வென்று இந்தியா முதலிடம் பிடித்தது.

30 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் 21 போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றது இந்தியா. தமிழகத்தைச் சேர்ந்த 9 வீரர்கள் 5 தங்கம் உட்பட 7 பதக்கங்களை வென்றனர். இந்திய அணியில் ஆண்களை விட பெண்களே அதிக பிரிவுகளில் பதக்கங்களை வென்று அசத்தினர். தமிழக வீராங்கனை அபிநயா 2 தங்க பதக்கங்களை வென்று அசத்தினார்.

ஒட்டுமொத்த சாம்பியனுக்கான பட்டத்தில் முதல் பரிசை இந்தியாவும், இரண்டாவது பரிசை இலங்கையும், மூன்றாவது பரிசை வங்கதேசமும் வென்றது. பாகிஸ்தான் மற்றும் பூடான் இறுதி வரை ஒரு பதக்கம் கூட வெல்லாமல் நாடு திரும்புகின்றனர்.

இதையும் படிங்க : தெற்காசிய ஜூனியர் தடகள போட்டி: நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள் - South Asian Junior Athletics Game

இது குறித்து 2 தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை அபிநயா ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "நான் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தில் இருந்து வந்திருக்கிறேன். 10 மற்றும் 11ஆம் வகுப்பில் தடகள போட்டியில் சர்வதேச அளவில் தங்கப்பதக்கம் வென்றேன்.

தற்போது 100மீ ஓட்டப்பந்தயத்தில் ஒரு தங்கப்பதக்கமும், தொடர் ஓட்டத்தில் ஒரு தங்கப்பதக்கமும் வென்றுள்ளோம். ஆசிய விளையாட்டு போட்டி, ஒலிம்பிக் ஆகிய போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்காக தங்கம் வெல்வதே என்னுடைய கனவு. நான் போட்டிக்காக வெளிநாடுகளுக்குச் சென்றேன். அங்கு சாப்பாடு சரி இல்லை. தற்போது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சாப்பாடு நன்றாக இருக்கிறது" என தெரிவித்தார்.

மேலும், தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை டீனா கூறுகையில், "நான் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து வருகிறேன். 400மீ தொடர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளேன். இந்தப் போட்டி தமிழ்நாட்டில் நடைபெற்றது மிகவும் பெருமையாக உள்ளது. விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்காக தமிழக அரசு நிறைய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலம் நாங்கள் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடிகிறது. சர்வதேச அளவில் சீனியர் பிரிவில் கலந்து கொண்டு இந்தியாவுக்காக பதக்கம் வெல்வதே எனது கனவு" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.