ETV Bharat / sports

மார்க்ரம் கேட்ச்சால் திருப்புமுனை... தென் ஆப்பிரிக்கா 7 ரன்களில் அபார வெற்றி! - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

T20 World Cup 2024: இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி
வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி (Credits - AP Photos)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 11:00 AM IST

செயின்ட் லூசியா: அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா வீரர் டீ காக் ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கினார்.

இங்கிலாந்து பவுலர்கள் ஒருவரையும் விட்டு வைக்காமல் சிக்சர்களாக அடித்தார். ஆர்ச்சர் வீசிய இன்னிங்ஸின் 3வது ஓவரில் 21 ரன்கள் எடுக்கப்பட்டது. டி காக் 22 பந்துகளில் அரைசதம் கடந்து, இந்த உலகக் கோப்பையில் அதிவேக அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனை படைத்தார். மறுமுனையில் பொறுமையாக ஆடி வந்த ஹெண்டிரிக்ஸ் 25 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து மொயின் அலி பந்தில் அவுட்டானார்.

இதனைதொடர்ந்து இங்கிலாந்து பவுலர்களை சிதறடித்த டி காக், ஆர்ச்சர் மெதுவாக வீசிய பந்தில் பட்லரிடம் கேட் கொடுத்து அவுட்டானார். அடுத்து வந்த கிளாசென் 8 ரன்கள் எடுத்திருந்த போது ஒரு ரன்னுக்காக ஓட முயன்றார். அப்போது கீப்பர் ஜாஸ் பட்லர் அடித்த அபார த்ரோவில் 8 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் வந்த கேப்டன் மார்க்ரம் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார்.

இதனைத்தொடர்ந்து மில்லர் அபாரமாக ஆடி ரன் ரேட் குறையாமல் பார்த்து கொண்டார். கடைசி ஓவரில் மில்லர் ஆர்ச்சர் பந்தில் 43 ரன்களுக்கு அவுட்டாக, அடுத்து வந்த ஜான்சென்(0) அவுட்டாக தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழந்து 163 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் ஃபார்மில் உள்ள பிலிப் சால்ட் இப்போட்டியில் 11 ரன்களுக்கு தொடக்கத்திலேயே அவுட்டாகி ஏமாற்றினார்.

தொடர்ந்து பொறுமையாக ஆடி வந்த பேர்ஸ்டோவ் 16 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்து வந்த பட்லர் (17), மொயின் அலி (9) ஆகியோர் பெரிய அளவில் சோப்பிக்கவில்லை. பின்னர் ஜோடி சேர்ந்த ஹாரி ப்ரூக், லிவிங்ஸ்டன் அதிரடியாக பவுண்டரி, சிக்சர்களாக அடித்து ரன் ரேட்டை உயர்த்தினர். 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்த லிவிங்ஸ்டன் ரபாடா பந்தில் நடையை கட்டினார்.

இந்நிலையில், ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. கடைசி ஒவரில் 14 ரனக்ள் தேவைப்பட்ட நிலையில், ப்ரூக் 53 ரன்களுக்கு மார்க்ரம் மிட் ஆஃபில் ஓடிச் சென்று பிடித்த அபாரமான கேட்ச்சில் அவுட்டானார். இந்த விக்கெட் ஆட்டத்தை தென் ஆப்பிரிக்கா பக்கம் திருப்பியது. இதனையடுத்து சாம் கரண் அந்த ஓவரில் ஒரு பவுண்டரி மட்டுமே அடித்தார். கடைசியில் தென் ஆப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க: கம்மின்ஸ் ஹாட்ரிக் எடுத்து அசத்தல்! 17 வருடங்களுக்கு பிறகு பிரட் லீயின் சாதனை சமன்! - T20 World Cup 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.