சென்னை: தென்னாப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 தொடர்கள் கொண்ட டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இதில் 2வது டி20 தொடர் இன்று மாலை 7 மணிக்கு சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, தென்னாப்பிரிக்க மகளிர் அணியினர் முதலில் களமிறங்கி விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்களைக் குவித்தனர். அடுத்ததாக, இந்திய மகளிர் அணியினர் விளையாட இருக்கும் பட்சத்தில் மழை குறுக்கிட்டதாலும், பிச் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருப்பதாலும் தற்போது இந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
'The 2nd T20I has been called off due to rain
— BCCI Women (@BCCIWomen) July 7, 2024
South Africa lead the series 1-0
Scorecard ▶️ https://t.co/wykEMCyvIl#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/JjrMbfGoUw
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 தொடர் வரும் ஜூலை 9ஆம் தேதி இதே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த டி20 தொடரில் இந்தியா வெல்வது கடினம். ஆனால், 3வது டி20 தொடரில் விளையாடுவதன் மூலம் டி20 தொடரை சமன் செய்ய இந்தியாவுக்கு வாய்ப்புகள் கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: SA VS IND; இந்திய மகளிர் அணிக்கு 178 ரன்கள் டார்கெட்.. அரைசதம் விளாசிய டாமின்ஸ்! - SA VS IND 2nd T20I