ETV Bharat / sports

பெங்களூரு 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! ஐபிஎல் சீசனை விட்டு பஞ்சாப் வெளியேற்றம்! - IPL2024 PBKS vsRCB Match Highlights - IPL2024 PBKS VSRCB MATCH HIGHLIGHTS

ஐபிஎல் கிரிகெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் நடப்பு சீசனில் இருந்து பஞ்சாப் அணி வெளியேறியது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 6:48 AM IST

தர்மசாலா: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஏப்.10) தர்மசாலாவில் நடைபெற்ற 58வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞசர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் விராட் கோலி 92 ரன்கள் விளாசினார். அவரைத் தொடர்ந்து ரஜத் படிதார் 55 ரன்களும், கேமரூன் க்ரீன் 46 ரன்களும் எடுத்து அணியின் 240 ரன்களை தாண்ட பக்கபலமாக இருந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பாப் டு பிளெசிஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை ஹர்சல் பட்டேல் 3 விக்கெட்டும், வித்வத் கவேரப்பா 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், கேப்டன் சாம் கரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து, 241 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது.

தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஜானி பேர்ஸ்டோவ், ரில்லி ரோஸ்சவு ஆகியோர் கூட்டணி அமைத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு திருப்பி ரன் குவித்த வந்த இந்த ஜோடியை லாக்கி பெர்குசன் பிரித்தார்.

அவரது பந்துவீச்சில் ஜானி பேர்ஸ்டோவ் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் சீரான இடைவெளியில் பஞ்சாப் அணியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. நிலைத்து நின்று அரை சதம் கடந்து விளையாடி வந்த ரில்லி ரோஸ்சவு தன் பங்குக்கு 61 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்ட பஞ்சாப் வீரர்கள் அவசரகதியில் சில ஷாட்டுகளை அடித்து ஆட்டமிழந்தனர். ஜித்தேஷ் சர்மா 5 ரன்களும், லியாம் லிவிங்ஸ்டோன் டக் அவுட்டாகியும் அடுத்தடுத்து வெளியேறினர். அதன் பின் ஆட்டம் மெல்ல பெங்களூரு பக்கம் திரும்பியது. சிறிது நேரம் விளையாட்டு காட்டி வந்த ஷஷாங் சிங்கும் 37 ரன்களில் அவுட்டானார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சாம் கரன் 22 ரன்கள் மட்டும் அடித்துக் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் போட்டி முழுமையாக பெங்களூருவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 17 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.

இதன் மூலம் பெங்களூரு அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. அர்ஷ்தீப் சிங் மட்டும் 4 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். பெங்களுரூ அணி தரப்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளும், கரன் சர்மா, லாக்கி பெர்குசன், ஸ்வப்நில் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 92 ரன்கள் விளாசிய விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தோல்வியின் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து பஞ்சாப் அணி வெளியேறியது. முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறிய நிலையில் 2வது அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி வெளியேறியது.

இதையும் படிங்க: 2024 பத்ம விருதுகள்: விஜயகாந்த், சீரஞ்சீவி, நடிகை வைஜெயந்திமாலா ஆகியோருக்கு விருது வழங்கல்! - Padma Awards 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.