ETV Bharat / sports

9 ஆண்டுகளுக்கு பின் இந்த முடிவு! வங்கதேச டெஸ்டில் ரோகித் செய்த சம்பவம்! - Rohit Sharma - ROHIT SHARMA

இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நடைபெற்று வரும் நிலையில், 9 ஆண்டுகளுக்கு பின் ஓர் அதிசயம் இந்த ஆட்டத்தில் நிகழ்ந்து உள்ளது. அது என்ன என்பது குறித்து இந்த செய்தியில் காணலாம்.

Etv Bharat
Rohit Sharma - Akash Deep (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 27, 2024, 1:03 PM IST

கான்பூர்: வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் நடைபெற்று வருகிறது. தொடர் கனமழையின் காரணமாக கான்பூர் மைதானம் ஈரமாக காணப்பட்டதால் போட்டி தாமதமாக தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

தற்போது இது தான் பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது. ஏனென்றால் சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடும் போதெல்லாம் டாஸ் வென்றால் பெரும்பாலும் முதலில் பேட்டிங்கே தேர்வு செய்ய அதிகம் வாய்ப்புள்ளது. இந்நிலையில், ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏறத்தாழ 9 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் சொந்த மண்ணில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்து இருப்பது இதுவே முதல் முறையாகும். கடைசியாக 2015ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தார்.

அதன்பின் தற்போது ரோகித் சர்மா வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது. தற்போது இந்த ஆட்டத்தின் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழும்பியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்து வரும் வங்கதேசம் அணி தற்போது உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்து உள்ளது. இந்திய வீரர் ஆகாஷ் தீப் அட்டகாசமாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வங்கதேச வீரர்கள் மொமினுல் ஹக் (17 ரன்), நஜ்முல் ஹுசைன் ஷான்டோ (28 ரன்) ஆகியோர் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கொல்கத்தாவுக்கு தாவிய சென்னை கை! ஓய்வு அறிவித்த அடுத்த நொடியே தேடி வந்த பொறுப்பு! - IPL 2025

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.