ஐதராபாத்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது இடம் பிடித்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் ரோகித் சர்மா 2வது இடத்தை பிடித்து உள்ளார்.
முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் உள்ளார். அவருக்கும் ரோகித் சர்மாவுக்கு பெரிய வித்தியாசம் இல்லை. பாபர் அசாம் 824 புள்ளிகளுடன் முதலிடத்திலும் அவரை விட 59 புள்ளிகள் குறைவாக ரோகித் சர்மா இரண்டாவது இடத்திலும் உள்ளார். மற்றொரு இந்திய வீரர் சுப்மன் கில் மூன்றாவது இடத்திற்கு இறங்கி உள்ளார்.
ROHIT SHARMA MOVES TO NUMBER 2 ICC ODI BATTERS RANKING 🇮🇳
— Johns. (@CricCrazyJohns) August 14, 2024
- Captain is coming for the top position. pic.twitter.com/DyRVNl4Q1U
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-க்கு 0 என்ற கணக்கில் இழந்த போதிலும் ரோகித் சர்மாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா மொத்தம் 157 ரன்கள் குவித்தார். இரண்டு அரை சதமும் ரோகித் சர்மா விளாசினார். அதேநேரம் மற்றொரு சீனியர் வீரர் விராட் கோலி 3 போட்டிகளில் வெறும் 58 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
இலங்கை மண்ணில் சுப்மன் கில் ரன் குவிக்க கடுமையாக போராடினார். இருப்பினும் அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை. இலங்கை வீரர் அவிஷ்கா பெர்னான்டோ 20 இடங்கள் முன்னேறி 68 இடத்தை பிடித்து உள்ளார். இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவிஷ்கா பெர்னான்டோ 93 ரன்கள் விளாசியதன் மூலம் அவரது தரவரிசை புள்ளிகள் அதிகரித்துள்ளன.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் குல்தீப் யாதவ் தொடர்ந்து 4வது இடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்பிரிக்க வீரர் கேஷ்வ மகராஜ், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களில் நீடிக்கின்றனர். இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இலங்கை அணிக்கு எதிரான தொடரில் கலந்து கொள்ளாத போதும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தொடர்ந்து 8வது இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 இடங்களில் 10வது இடத்தை பிடித்தார். இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகள் விளாசிய இலங்கை வீரர் துனித் வெல்லலேகே 59வது இடத்தில் உள்ளார்.
அதேபோல் ஆல்ரவுண்டர் தரவரிசையில் துனித் வெல்லலேகே 15 இடங்கள் முன்னேறி 54வது இடத்தில் அங்கம் வகிக்கிறார். இலங்கை தொடரில் 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் அக்சர் பட்டேல் 83வது இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி 320 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
இதையும் படிங்க: சர்வதேச கிரிக்கெட்டில் முதல் சதம்! சச்சினின் சாதனைக்கு அடித்தளம் போட்ட இங்கிலாந்து! - sachin tendulkar