பாரீஸ்: 33வது பாரீஸ் ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கோலாகல தொடக்க விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3வது நாளான இன்று (ஜூலை.29) ஆடவர் இரட்டையர் டென்னிஸ் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ரோகன் போபன்னா - என் ஸ்ரீராம் பாலாஜி இணை பிரான்சின் கேல் மொன்பில்ஸ், எட்வர்ட் ரோஜர் வெசலின் ஜோடியுடன் மோதியது.
தொடக்கம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடிய இந்திய இணையால், பிரான்ஸ் வீரர்களுக்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் போனது. தொடக்க செட்டை 5-க்கு 7 என்ற கணக்கில் ரோகன் போபன்னா - ஸ்ரீராம் பாலாஜி இணை கோட்டைவிட்டது. இரண்டாவது செட்டிலும் பிரான்ஸ் ஜோடி ஆதிக்கம் செலுத்தியது.
🇮🇳 Result Update: #Tennis🎾 Men's Doubles Round 1👇
— SAI Media (@Media_SAI) July 28, 2024
Major upset for #TeamIndia as @rohanbopanna and N. Sriram Balaji's campaign at #ParisOlympics2024 comes to an end.
The duo lost 5-7, 2-6 to French pair Gael Monfils & Edouard Roger-Vasselin.@AITA__Tennis pic.twitter.com/Ecf5Lu2yrh
தடுமாற்றத்துடன் தொடங்கிய இந்திய ஜோடியால் அதன்பின் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. இறுதியில் இந்தியாவின் ரோகன் போபன்னா, ஸ்ரீராம் பாலாஜி இணை 5-க்கு 7, 2-க்கு 6 ஆகிய நேர் செட் கணக்கில் பிரான்சின் கேல் மொன்பில்ஸ், எட்வர்ட் ரோஜர் வெசலின் ஜோடியிடம் தோல்வியை தழுவியது.
இந்த தோல்வியின் மூலம் பாரீஸ் ஒலிம்பிக்கில் இருந்து இந்திய ஜோடி வெளியேறியது. மேலும், பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பும் முடிவுக்கு வந்தது.
இதையும் படிங்க: அஸ்வின் அணியை அலறவிட்ட நெல்லை.. 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி! - tnpl 2024