ETV Bharat / sports

ஐபிஎலில் ரூ.13 கோடிக்கு தக்கவைப்பு! மொத்த காசையும் கொண்டு புது வீடு வாங்கிய வீரர்! யார் தெரியுமா?

2025 ஐபிஎல் தொடருக்காக கொல்கத்தா அணியில் அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட ரிங்கு சிங், 13 கோடி ரூபாய் மதிப்பில் சொந்தமாக பங்களா வாங்கி உள்ளார்.

Etv Bharat
Rinku singh with his Family (@X)
author img

By ETV Bharat Sports Team

Published : 4 hours ago

ஐதராபாத்: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம் இந்த மாத இறுதியில் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக கடந்த அக்டோபர் 31ஆம் தேதி மொத்தம் உள்ள 10 அணிகளும் தக்கவைப்பு வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. மொத்தம் 46 வீரர்கள் 10 அணிகளில் இருந்து தக்கவைக்கப்பட்டு இருந்தனர்.

கொல்கத்தா, டெல்லி, பஞ்சாப், லக்னோ அணிகள் கேப்டன்களையே கழற்றி அதிர்ச்சி அளித்தன. கடந்த 2024 ஐபிஎல் சீசனில் கோப்பை வென்று தந்த ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா அணியில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேநேரம் கொல்கத்தா அணியில் அவருக்கு முதன்மைத்துவம் வழங்காத காரணத்தாலே விலக நேரிட்டதாக தகவல் கூறப்பட்டது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிகபட்சமாக அதிரடி வீரர் ரிங்கு சிங் 13 கோடி ரூபாய் தொகைக்கு தக்கவைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து இரண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆந்திரே ரஸ்செல் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தலா 12 கோடி ரூபாய் தொகைக்கு தக்கவைக்கப்பட்டனர்.

வருண் சக்கரவர்த்தி 12 கோடி ரூபாய்க்கும், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 4 கோடி ரூபாய் ஊதியத்திலும் தக்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 7 ஆண்டுகளாக கொல்கத்தா அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் ரிங்கு சிங், சம்பளமாக வெறும் 55 லட்ச ரூபாயை மட்டுமே பெற்று வந்தார்.

அவரை விட இளம் வீரர்கள், புதிதாக அணியில் இணைந்தவர்கள் பல கோடி ரூபாய் ஊதியம் பெற்று வந்ததாலும் ரிங்கு சிங் குறைவான ஊதியத்தையே பெற்று வந்தார். கடந்த ஐபிஎல் போட்டியில் கூட 24 கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.

இந்நிலையில், தற்போதையை சீசனில் ரிங்கு சிங்கிற்கு அதிகபட்சமாக 13 கோடி ரூபாயை கொல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக்கான் வழங்கி உள்ளார். இந்நிலையில், தான் ரிங்கு சொந்தமாக பங்களா வாங்கி உள்ளார். அந்த பங்களாவின் மதிப்பு 13 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.

உத்தர பிரதேசம் மாநிலம் அலிகர்க் பகுதியில் உள்ள கோல்டன் எஸ்டேட்டின் ஓசோன் சிட்டியில் 13 கோடி ரூபாய் மதிப்பில் தான் பங்களாவை ரிங்கு சிங் வாங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 500 சதுர அடி கொண்ட வீட்டில் கடந்த வாரம் தன் குடும்பத்துடன் ரிங்கு சிங் குடியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக குடும்பத்துடன் புதுவீட்டில் பூஜை உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தி குடியேறியதாக கூறப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ரிங்கு சிங், இதுவரை 45 போட்டிகளில் விளையாடி 893 ரன்கள் குவித்து உள்ளார்.

இதையும் படிங்க: பிசிசியின் புதிய செயலாளர் முடிவு? முன்னாள் அமைச்சர் மகனுக்கு பதவி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.