பாரீஸ்: 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று (ஜூலை.29) மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை ரமீதா ஜிந்தல் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரமீதா ஜிந்தல் முதல் ஐந்து சுற்றுகளில் 52.5 புள்ளிகள் எடுத்து நான்காவது இடத்தில் இருந்தார்.
🇮🇳💔 𝗦𝗼 𝗰𝗹𝗼𝘀𝗲 𝘆𝗲𝘁 𝘀𝗼 𝗳𝗮𝗿 𝗳𝗼𝗿 𝗥𝗮𝗺𝗶𝘁𝗮! Ramita Jindal misses out on possibly securing a second medal for India despite putting in a strong performance in the final of the women's 10m Air Rifle event.
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) July 29, 2024
🔫 A 9.7 in the last shot of the second series proved to… pic.twitter.com/MhlSHh2xcK
சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை ரமீதா ஜிந்தல் பெற்றுத் தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இருப்பினும் அடுத்தடுத்த சுற்றுகள் அவருக்கு சாதகமாக அமையவில்லை. இரண்டாவது பிரிவில் அவர் விறுவிறுவென புள்ளிப் பட்டியலில் கீழே இறங்கினார்.
கடைசியாக 6வது இடத்தில் இருந்த ரமீதா ஜிந்தல், தனது இறுதி வாய்ப்பில் 10.5 புள்ளிகள் எடுத்தார். இருப்பினும் பிரான்ஸ் வீராங்கனை ஓசியானா முல்லர் 10.8 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றார். இதனால் இந்திய வீராங்கனை ரமீதா ஜிந்தல் 0.3 புள்ளிகள் வித்தியாசத்தில் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இதன் மூலம் ரமீதா ஜிந்தலின் பதக்க வாய்ப்பு முடிவுக்கு வந்தது. அதேநேரம் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மனு பாகெர் - சர்போஜித் சிங் இணை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. மனு பாகெர்- சர்போஜித் சிங் இணை 580 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தை பிடித்து பதக்க வாய்ப்புக்கான போட்டிக்கு தகுதி பெற்றது.
மனு பாகெர் - சர்போஜித் இணை நாளை (ஜூலை.30) மதியம் 1 மணிக்கு நடைபெறும் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் விளையாடுகிறது. அதேநேரம் மற்றொரு இந்திய ஜோடி ரிதம் சங்வான் மற்றும் அர்ஜுன் சீமா 576 புள்ளிகள் எடுத்து 10வது இடத்தை பிடித்து அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.
இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி? மனு பாகெர் - சரபோஜித் அபாரம்! - Paris olympic 2024