ETV Bharat / sports

டாஸ் வென்று ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு! டெல்லியின் பிளே ஆப் கனவு நிறைவேறுமா? - IPL 2024 DC vs RR Match Highlights - IPL 2024 DC VS RR MATCH HIGHLIGHTS

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

Etv Bharat
File photo of Delhi Capitals skipper Rishabh Pant ((ANI))
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 7:05 PM IST

Updated : May 7, 2024, 7:16 PM IST

டெல்லி: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மே.7) இரவு 7.30 மணிக்கு தலைநகர் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 56வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் களம் காணுகின்றன.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். நடப்பு சீசனில் விளையாடிய 10 ஆட்டங்களில் 8ல் வெற்றிப் பெற்று 16 புள்ளுகளுடன் ராஜஸ்தான் அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல் டெல்லி விளையாடிய 11 ஆட்டங்களில் 5ல் மற்றும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தும் பட்சத்தில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் நுழைந்து பிளே ஆப் வாய்ப்பில் டெல்லி அணி தொடரும். அதேநேரம் ராஜஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் டெல்லி அணியின் பிளே ஆப் வாய்ப்பு சற்று குறைவு தான். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்று வாய்ப்பை ராஜஸ்தான் அணி உறுதி செய்யும்.

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 முறையும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக விளையாடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல்:

டெல்லி கேபிட்டல்ஸ்: ஜேக் ப்ரேசர் மெக்குர்க், அபிஷேக் போரல், ஷாய் ஹோப், ரிஷப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்பாடின் நைப், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரியான் பராக், டோனோவன் பெரீரா, ரோவ்மேன் பவல், ஷிபம் துபே, ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

Last Updated : May 7, 2024, 7:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.