ஹைதராபாத்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆகியோர் தனியார் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், ராகுல் டிராவிட் மற்றும் எம்.எஸ்.தோனியை இருவரும் கெளரவித்துள்ளனர்.
இதில் ரோகித் சர்மா பேசியதாவது, “ராகுல் டிராவிட் உடனான பயணமானது நீண்ட தூரமானது. இந்த பயணமானது எங்கே தொடங்கியது என்றால், நான் அயர்லாந்தில் முதன்முதலில் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் கேப்டனாக இருந்த போது தொடங்கியது.
இந்திய அணிக்கு மிகப்பெரிய ரோல் மாடல் ராகுல் டிராவிட். அவர் தனிப்பட்ட முறையிலும், அணிக்காவும் நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறார். கடினமான சூழ்நிலைகளில் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளார். நாங்கள் அவரது தலைமையின் கீழ் பல பெரிய போட்டிகளில் விளையாடி இருக்கின்றோம்” என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ரிஷப் பண்ட் பேசியதாவது, "இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி எனக்கு களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நிறைய உதவிகள் செய்துள்ளார். அவர் எனக்கு எப்போதும் ஆதரவாகவும், என்னை வழிநடத்துபவராகவும் இருந்துள்ளார். மேலும், எனது அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள என்னை ஊக்கப்படுத்துவார்" என தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: “உடம்பில் பச்சை குத்திக்கொள்ள வேண்டுமோ?”.. ருதுராஜ் கெய்க்வாட் குறித்து பத்ரிநாத் பரபரப்பு பகிர்வு! - india squad against sri lanka tour