ஹைதராபாத்: உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்தது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், மற்றும் தென்னாப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, ஆகிய நாடுகள் பங்கேற்று விளையாடின.
இந்த தொடரின் இறுதிப் போட்டியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி, யூனுஸ் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதனைக் கொண்டாடும் வகையில் யுவராஜ், ஹர்பஜன், மற்றும் ரெய்னா ஆகியோர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர்.
Winning celebrations from Yuvraj Singh, Harbhajan and Raina. 🤣🔥 pic.twitter.com/mgrcnd8GpH
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 14, 2024
சர்ச்சையான வீடியோ: அந்த வீடியோவில் சமீபத்தில் வெளியான இந்தி திரைப்படப் பாடலான "தோபா, தோபா" வுக்கு நடனம் ஆடுவது போல தங்கள் கால்களை இழுத்து, இழுத்து மாற்றுத்திறனாளிகள் போல நடந்து வந்து நடனம் ஆடினர். மேலும் தாங்கள் மிகவும் சோர்ந்து இருப்பதாக அந்த பதிவில் ஹர்பஜன் சிங் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னாள் பாரா பேட்மிண்டன் வீரர் மானசி ஜோஷி, உள்ளிட்ட பலர் இந்த வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையம் (NCPEDP) என்ற அரசு சாரா அமைப்பின் நிர்வாக இயக்குநரான அர்மான் அலி என்பவர், மாற்றுத்திறனாளிகளைக் கேலி செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டதாக யுவராஜ், ஹர்பஜன், ரெய்னா ஆகிய மூவர் மீதும் அமர் காலனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Absolutely rightly called out by @joshimanasi11. Most unbecoming of these players to indulge in this without realizing the terrible impact of their (mis)deeds. https://t.co/KoKPjbJPwJ
— Pratap Tee PeeE (@topeszz) July 15, 2024
அந்த புகாரில் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி, மெட்டா இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சந்தியா தேவநாதன் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வீடியோ விவகாரம் தொடர்பாக ஹர்பஜன் சிங் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஹர்பஜன் சிங்: இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியை வென்ற பிறகு சமூக ஊடகங்களில் வெளியிட்ட 'தௌபா தௌபா' வீடியோக்கள் குறித்து புகார் தெரிவிக்கும் மக்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
யாருடைய மனதையும் நாங்கள் புண்படுத்தவில்லை. ஒவ்வொரு தனிமனிதனையும் சமூகத்தையும் நாங்கள் மதிக்கிறோம். தொடர்ந்து 15 நாட்களுக்கு கிரிக்கெட் விளையாடிய பிறகு எங்கள் உடல் எப்படி இருக்கிறது என்பதை சொல்வதற்காக அந்த வீடியோவை வெளியிட்டோம்.
— Harbhajan Turbanator (@harbhajan_singh) July 15, 2024
உடல் முழுவதும் வலியாக இருந்தது. நாங்கள் யாரையும் அவமதிக்கவோ அல்லது புண்படுத்தவோ முயற்சிக்கவில்லை. நாங்கள் தவறு செய்ததாக நினைத்தால். அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து இதை இங்கே நிறுத்திவிட்டு முன்னேறுவோம். மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 2007 போன்றதொரு சம்பவம்.. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்தியா!