ETV Bharat / sports

பாரீஸ் ஒலிம்பிக் 2024: 4வது நாளில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு எப்படி? - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவில் இன்று ஜூலை 30ஆம் தேதி இந்திய வீரர்கள் விளையாடும் போட்டிகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

Etv Bharat
Paris Olympics Day 4 Schedule (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 6:01 AM IST

பாரீஸ்: 33வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஜூலை 26ஆம் தேதி கோலாகல தொடக்க விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூலை.30) 4வது நாளில் இந்திய வீரர், வீராங்கனைகள் முக்கிய ஆட்டங்களில் விளையாடுகின்றனர்.

துப்பாக்கிச் சுடுதல்:

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் துப்பாக்கிச் சுடுதலில் சர்போஜித் சிங், மனு பாகெர் இணை வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாடுகின்றனர். ஏற்கனவே தனிநபர் பிரிவில் மனு பாகெர் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்று உள்ளார். கலப்பு இரட்டையர் பிரிவிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை வென்று தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, ட்ராப் பெண்கள் தகுதி சுற்றுப் போட்டியில் இந்தியாவுக்காக ஸ்ரேயாசி சிங் மற்றும் ராஜேஸ்வரி குமாரி விளையாட உள்ளனர். இதில் ட்ராப் பெண்கள் தகுதி சுற்றில் ஸ்ரேயாசி சிங் மற்றும் ராஜேஸ்வரி குமாரி மதியம் 12:30 மணிக்கு விளையாட உள்ளனர்.

அதேபோல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் மனு பாகெர் மற்றும் சரப்ஜோத் சிங் பிற்பகல் 1 மணிக்கு விளையாட உள்ளனர்.

ஹாக்கி:

இந்திய ஆடவர் ஹாக்கி அணி இன்று (ஜூலை.30) மூன்றாவது குரூப் ஆட்டத்தில் விளையாடுகிறது. பி பிரிவில் இடம் பெற்று உள்ள இந்திய அணி இன்று அயர்லாந்தை எதிர்கொள்கிறது. முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, இரண்டாவது ஆட்டத்தில் அர்ஜென்டினாவிடம் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்தியா - அயர்லாந்து இடையிலான ஆண்கள் ஹாக்கி குரூப் பிரிவு ஆட்டம் மாலை 4:45 மணிக்கு நடைபெறுகிறது.

வில்வித்தை:

பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் அங்கிதா பகத் மற்றும் பஜன் கவுர் ஆகியோர் விளையாடுகின்றனர். 41வது போட்டியில் போலந்தின் வயோலெட்டா மஸ்ஸருடன் அங்கிதா விளையாடுகிறார். அதே நேரத்தில் பஜன் கவுர் இந்தோனேசியாவின் கமல் சாயிபா எதிர்கொள்கிறார்.

இந்திய வீராங்கனைகள் இருவரின் போட்டிகளும் எலிமினேஷன் போட்டிகள், எந்த அணி தோற்குமோ அந்த அணி ஒலிம்பிக் தொடரில் இருந்து வெளியேற்றப்படும். ஆடவர் ஒற்றையர் ரவுண்ட் ஆப் 32 எலிமினேஷன் ஆட்டத்தில் தீரஜ் பொம்மதேவரா விளையாடுகிறார்.

அங்கிதா பகத் விளையாடும் பெண்கள் ஒற்றையர் சுற்று மாலை 5:14 மணிக்கு நடைபெறுகிறது.

பஜன் கவுர் விளையாடும் பெண்கள் ஒற்றையர் சுற்று மாலை 5:27 மணிக்கு நடைபெறுகிறது.

தீரஜ் பொம்மதேவரா விளையாடும் ஆண்கள் ஒற்றையர் சுற்று இந்திய நேரப்படி இரவு 10:46 மணிக்கு தொடங்குகிறது.

பேட்மிண்டன்:

இந்தியாவின் நட்சத்திர ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆண்கள் இரட்டையர் பிரிவு பிரிவில் இந்தோனேசியாவின் பஜர் அல்பியன் மற்றும் முஹம்மது ரியான் ஆர்டியான்டோவை எதிர்த்து விளையாடுகின்றனர். அதேபோல் மகளிர் பிரிவில் இந்தியா சார்பில் அஷ்வினி பொன்னப்பா மற்றும் தனிஷா க்ராஸ்டோ பெண்கள் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் விளையாடுகின்றனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி விளையாடும் ஆட்டம் மாலை 5:30 மணிக்கு துவங்குகிறது.

அதேபோல், பெண்கள் இரட்டையர் பிரிவில் அஷ்வினி பொன்னப்பா மற்றும் தனிஷா க்ராஸ்டோ விளையாடும் போட்டி மாலை 6:20 மணிக்கு தொடங்குகிறது.

குத்துச்சண்டை:

ஆடவர் குத்துச்சண்டை போட்யியில் 51 கிலோ எடைப் பிரிவின் 16வது சுற்று ஆட்டத்தில் அமித் பகல் விளையாடுகிறார். அவர் ஜாம்பியாவின் பேட்ரிக் சின்யெம்பாவை எதிர்கொள்கிறார். இந்த ஆட்டம் மாலை 7.16 மணிக்கு தொடங்குகிறது.

அதேபோல், பெண்களுக்கான 57 கிலோ எடைப் பிரிவின் 32வது சுற்று ஆட்டத்தில் ஜாஸ்மின் லம்போரியா, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நெஸ்தி பெட்சியோவுடன் இரவு 9:24 மணிக்கு களம் காணுகிறார்.

இதையும் படிங்க: பெண் நீச்சல் வீராங்கனைகள் குறித்து முகம் சுழிக்கும் வகையில் கருத்து! நேரலையில் என்ன நடந்தது? - Paris Olympics 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.