ETV Bharat / sports

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி; தமிழ்நாடு அணிக்கு ஆட்டம் காட்டிய ஆர்மி அணி அபார வெற்றி! - Murugappa Gold Cup Hockey

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடரில் ஆர்மி அணியுடன் பலப்பரீட்சை நடத்திய தமிழ்நாடு அணி 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

ஹாக்கி வீரர்கள்
ஹாக்கி வீரர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: 95வது எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசி) அணி - ஒடிசா ஹாக்கி சங்கத்தை (எச்ஓடி) 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஆட்டம் தொடங்கிய 18வது நிமிடத்தில், ஐஓசி அணியின் சுமித் குமார் ஃபீல்ட் கோலை அடித்தார். இருப்பினும், ஒடிசா அணியின் சுதீப் மின்ஸின் அடுத்த நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் கோல் அடித்து, ஆட்டத்தை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தார். 28வது நிமிடத்தில், ரகுநாத் விஆர் மற்றொரு பெனால்டி கார்னர் மூலம் கோல் அடிக்க, ஐஓசி அணி 2-1 என்ற கணக்கில் முன்னேறியது.

ஆட்டத்தின் 42வது நிமிடத்தில், ஐஓசி அணியின் குஜிந்தர் சிங் பெனால்டி ஸ்ட்ரோக்கை ஸ்லாட் செய்து கோல் அடித்தார். இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஐஓசி அணி, ஒடிசா அணியை கோல் அடிக்க விடாமல் டிபன்ஸ் செய்தது. இதனால் ஆட்ட நேர முடிவில் ஐஓசி அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

தமிழ்நாடு அணி தோல்வி: இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில், ஆர்மி அணி 3-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அணியை வென்றது. இப்போட்டியில் ஆரம்பத்திலேயே ஆர்மி அணி முன்னிலை பெற்றது. அந்த அணியின் கௌரவ் பாக்தானி ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார்.

தொடர்ந்து 29வது நிமிடத்தில் ஆர்மி அணியின் அக்‌ஷய் துபே மற்றொரு கோல் அடித்தார். இதன் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் 47வது நிமிடத்தில் தமிழக அணியின் தினேஷ் குமார், பெனால்டி கார்னர் மூலம் முதல் கோல் அடித்து அணியின் புள்ளிக் கணக்கை தொடங்கினர்.

அதற்கு அடுத்த நிமிடமே ஆர்மி அணியின் சந்தன் ஐந்து பெனால்டி கார்னர் கோல் அடிக்க, 3-1 என்ற கணக்கில் தமிழ்நாடு அணி தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம், பிரிவு A இல் ஆர்மி அணி முதலிடத்திற்கு முன்னேறியது. பிரிவு Bல் ஐஓசி அணி ஒடிசா அணியை வீழ்த்தியதன் மூலம் அந்தப் பிரிவின் மத்திய செயலகம், கர்நாடகா மற்றும் போபால் (NCOE) ஆகிய மூன்று அணிகள் நாக் அவுட் சுற்றுப் போட்டியிலிருந்து வெளியேறியது.

இதையும் படிங்க: ISL கால்பந்து தொடர்: முகமெதியன் ஸ்போர்ட்டிங் கிளப் அணியுடன் மோதும் சென்னை எஃப்சி அணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.