லக்னோ: ஐபிஎல் தொடரின் 48வது போட்டி லக்னோ எக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதலே மும்பை அணிக்கு லக்னோ அணி அதிர்ச்சியை கொடுத்து வந்தது. தொடக்க வீரர் ரோகித் சர்மா 4, சூர்யகுமார் யாதவ் 10, திலக் வர்மா 7 என அடுத்தது விக்கெட்களை கைப்பற்றி போட்டியை தன் பக்கம் மாற்றினர் லக்னோ அணியினர்.
தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவது களத்தில் நீடித்து ரன்களை சேர்ப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களம் வந்த நேஹால் வதேரா - தொடக்க வீரர் இஷான் கிஷனுடன் சேர்ந்து ரன்கள் சேர்த்தார்.
மிகவும் தடுமாறிய இஷான் கிஷன் 36 பந்துகள் பிடித்த நிலையில், 32 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அதன் பின் வதேரா 46, டிம் டேவிட் 35 ரன்களும் எடுத்தனர். இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தனர்.
லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக மொஹ்சின் கான் 2 விக்கெட்களை கைப்பற்றினார். மற்ற பந்து வீச்சாளர்களான ஸ்டோனிஸ், நவீன்-உல்-அக், மயங்க் யாதவ், ரவி பிஸ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து லக்னோ அணி 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடி வருகின்றது.
இதையும் படிங்க: ஐபிஎல் நடத்தை விதிகள் மீறல்: கொல்கத்தா வீரர் ஹர்சித் ராணா ஒரு போட்டியில் விளையாட தடை! - KKR Player Harshid Rana Ban