ஐதராபாத்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது முதலே எம்எஸ் தோனி பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வந்தாலும் அவ்வப்போது விவசாயம், குடும்பத்தினருடன் நேரம் ஒதுக்கி அதன் மூலமாகவும் டிரெண்டாகி வருகிறார்.
அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி இடம் பெறுவாரா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்த தோனி, ஆடும் லெவனில் தான் இறங்கும் இடத்தையும் மாற்றிக் கொண்டார்.
கால் மூட்டு வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அணியில் தனது வரிசையை தோனி மாற்றிக் கொண்டதாக கூறப்பட்டாலும், பல்வேறு ஆட்டங்களில் அவரை காணாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், 2025 ஐபிஎல் சீசனில் தோனி களமிறங்குவாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.
MS DHONI PLAYING BADMINTON 🔥
— Johns. (@CricCrazyJohns) August 24, 2024
- Thala smashing it...!!!! pic.twitter.com/epxE1WKuJW
இந்திய அணிக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் தோனியை அன்கேப்ட் வீரராக அணியில் தக்கவைக்க ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதேநேரம் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐ அறிவிப்பு வெளியிடும் பின் அணியில் தோனியின் நிலை குறித்து தெரியவரும் எனக் தகவல் கூறப்படுகிறது.
அண்மையில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணி உரிமையாளர்களிடையே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அன்கேப்ட் வீரர்கள் தக்கவைப்பு விதிமுறையை நீக்கக் கோரப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனிப்பட்ட முறையில் அன்கேப்ட் விதிமுறையை அம்லபடுத்த பிசிசிஐயை அறிவுறுத்தியதாக தகவல் பரவியது.
ஆனால் இந்த விவகாரத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் மறுத்தார். விரைவில் சென்னை அணியில் தோனி என்னவாக இருப்பார் எனத் தெரியவரும். அண்மைக் காலமாக நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிப்பதை தோனி வழக்கமாக கொண்டு உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தாபா கடையில் நண்பர்களுடன் அமர்ந்து தோனி உணவருந்தும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில், தற்போது தோனியின் மற்றொரு வீடியோ சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில் தோனி தன் நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடுகிறார்.
பொதுவாக கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட தோனி, பேட்மிண்டன் விளையாடுவதை அவரது ரசிகர்கள் ஆர்வமாக கண்டு களிக்கின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: சிஎஸ்கே-வால் தோனிக்கு வரப்போகும் நஷ்டம்! அன்கேப்ட் பிளேயர் என்றால் என்ன? - Dhoni Lose in CSK