ETV Bharat / sports

பாரிஸ் ஒலிம்பிக் 2024; டேபிள் டென்னிஸில் மணிகா பத்ரா வரலாற்று சாதனை! - paris olympics 2024

paris olympics 2024: மகளிர் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 4-0 என்ற கணக்கில் பிரான்ஸ் வீராங்கனையான ப்ரித்திகா பவடேவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

மணிகா பத்ரா
மணிகா பத்ரா (Credits - AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 11:59 AM IST

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த ஜூலை 26ஆம் தேதி கோலாகல தொடக்க விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் முக்கிய ஆட்டங்களில் விளையாடுகின்றனர். இதன்படி இன்று நடைபெற்ற மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் 32வது சுற்றில் உலக தரவரிசையில் 28 ஆவது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை மணிகா பத்ராவுக்கும், 18வது இடத்தில் இருக்கும் பிரான்ஸ் வீராங்கனையான ப்ரித்திகா பவடேவுக்கும் பலப்பரிட்சை நடைபெற்றது. இந்த போட்டியில் மணிகா பத்ரா 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இந்த போட்டியில் தொடக்கம் முதலேயே ஆதிக்கம் செலுத்திய மணிகா பத்ரா 11-9, 11-6, 11-9, 11-7 என்ற செட் கணக்கில் ப்ரித்திகாவை வீழ்த்தினார். இதன்மூலம் டேபிள் டென்னிஸில் காலிறுதிக்கு முந்தைய 16வது சுற்றுக்கு தேர்வாகி வரலாறு படைத்துள்ளார். இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் முன் காலிறுதிக்கு(pre-quarterfinals) செல்வது இதுவே முதல்முறையாகும்.

பிரான்ஸ் வீராங்கனையான ப்ரித்திகா 2020ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் தன் முதல் சுற்றிலேயே வெளியேறினார். அதன்பின் படிப்படியாக தனது தரத்தை உயர்த்தி டேபிள் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 18வது இடத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாய்ப்பை இழந்த இந்திய வீரர்: நேற்று நடைபெற்ற ஆடவர் டேபிள் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் ஹர்மீத் தேசாய், சர்வதேச தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள பிரான்ஸ் வீரர் பெலிக்ஸ் லெப்ரனுடன் மோதினார். ஆரம்பம் தடுமாற்றத்துடன் தொடங்கிய ஹர்மீத் தேசாய், பிரான்ஸ் வீரருக்கு எதிராக புள்ளிகளை குவிக்க முடியாமல் தடுமாறினார். தொடக்க செட்டை 8-க்கு 11 என்ற கணக்கில் இழந்த ஹர்மீத் தேசாய் அதன் பின்னரும் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை.

தொடர்ந்து அடுத்தடுத்த செட்டுகளை 7-க்கு 11, 8-க்கு 11 என்ற கணக்கில் ஹர்மீத் தேசாய் இழந்தார். மொத்தம் 28 நிமிடங்களே நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் பிரான்ஸ் வீரர் பெலிக்ஸ் லெப்ரான் 4-க்கு 0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த தோல்வியின் மூலம் ஹர்மீத் தேசாய் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறினார்.

இதையும் படிங்க: பாரீஸ் ஒலிம்பிக் 2024: 4வது நாளில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.