ETV Bharat / sports

கொல்கத்தாவின் கேப்டனாகும் மும்பை நட்சத்திரம்! நிச்சயமா ரோகித் சர்மா இல்லை! வேற யார்? - KKR New Captain - KKR NEW CAPTAIN

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை கழற்றிவிட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திரத்தை கேப்டனாக அறிவிக்க ஷாருக்கான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Rohit Sharma (ANI Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 25, 2024, 3:24 PM IST

டெல்லி: அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மெகா ஏலத்துடன் நடைபெற உள்ளது. அனைத்து அணியிலும் பெருவாரியான மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டனையே மாற்றும் திட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடப்பு சீசனில் கோப்பையை வென்று தந்த ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டன் பதவியில் இருந்து தூக்குவது மட்டுமின்றி அணியில் இருந்தே கழற்றி விட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஒருவரை கேப்டனாக அறிவிக்க கொல்கத்தா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரோகித் சர்மா:

அதேநேரம் அவர் ரோகித் சர்மா இல்லை எனக் கூறப்படுகிறது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட சூர்யகுமார் யாதவ் எனத் தகவல் சொல்லப்படுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தரப்பில் கேப்டன் பொறுப்பை சூர்யகுமார் யாதவிற்கு வழங்க முன்வந்ததாகவும் அதை சூர்யகுமார் யாதவ் ஏற்றுக் கொண்டதாகவும் தகவல் கூறப்படுகிறது.

அதனால் 2025ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் சூர்யகுமார் யாதவ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவை வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அவரை கேப்டனாக்கியது.

சூர்யகுமார் யாதவ்:

அதேபோல் அடுத்த ஐபிஎல் சீசனில் சூர்யகுமா யாதவை டிரேட் மூலம் வாங்கி கேப்டனாக்க கொல்கத்தா அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அசத்தலாக கேட்ச பிடித்த சூர்யகுமா யாதவ் அதன் பின் இந்திய அணியை வழிநடத்தும் அளவுக்கு உயர்ந்தார்.

அதேநேரம் நடப்பு சீசனில் கோப்பை வென்று தந்த ஸ்ரேயாஸ் ஐயரை கழற்றி விடும் கொல்கத்தா அணி நிர்வாகத்தின் முடிவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிரடி நாயகனுக்காக அடம் பிடிக்கும் டெல்லி அணி! அடுத்த பயிற்சியாளர் யார்? - Delhi Capitals New Coach

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.