ETV Bharat / sports

தரமான பந்து வீச்சு டெல்லியை வீழ்த்தியது ஆர்சிபி..பிளே ஆஃப் வாய்பை தக்கவைத்தது! - RCB vs DC - RCB VS DC

RCB vs DC Match Highlights: டெல்லி கேபிடல்ஸ் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் வாய்பை தக்கவைத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

IPL 2024 RCB vs DC
IPL 2024 RCB vs DC (Credits - ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 8:56 AM IST

பெங்களூரு: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 62வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் அனியை எதிர் கொண்டது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் அக்சர் பட்டேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன் படி முதலில் களமிறங்கிய பெங்களூரூ அணி. அதிரடியாக விளையாடிய ராஜ் படிதார் 32 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் விளாசினார். மறுபுறம் 29 பந்துகளை எதிர் கொண்ட, வில் ஜாக்ஸ் 2 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் சேர்த்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது பெங்களூரு. டெல்லி அணி தரப்பில் கலில் அகமது, ராசிக் சலாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது டெல்லி கேபிடல்ஸ்.

டேவிட் வார்னர் மற்றும் ஜேக் ஃப்ரேசர் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். போட்டியின் முதல் ஓவரிலேயே 1 ரன்னுக்கு தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார் வார்னர். இதனை அடுத்து களமிறங்கிய அபிஷேக் போரல் 2 ரன்னுக்கு வெளியேற, மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஜேக் ஃப்ரேசர் 21 ரன்கள் அடித்து இருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்து வந்த குமார் குஷாக்ரா 2 ரன்னுக்கு வந்த வேகத்தில் வெளியேறினார். இதனால் 30 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழைந்து தடுமாறியது டெல்லி அணி. இதனையடுத்து சாய் ஹோப் மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர்.

அணியின் ஸ்கோர் 86 ரன்னாக இருந்த போது நிதனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாய் ஹோப் 29 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து அடுத்து களமிறங்கிய எந்த பேட்ஸ்மேனும் பெரியதாக சோபிக்கவில்லை.

கடைசிவரை அணியின் வெற்றிக்காகப் போராடிய அக்சர் படேல் பட்டேல் 39 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் என 57 ரன்கள் விளாசிய நிலையில் யஷ் தயாள் வீசிய பந்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இறுதியில் 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே சேர்த்தது டெல்லி அணி.

பெங்களூரு அணி தரப்பில் யஷ் தயாள் 3 விக்கெட்டுகளையும், லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினர். இதனால் 47 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்பை தக்கவைத்தது பெங்களூரு.

இதையும் படிங்கள்:ரசிகர்களை மகிழ்வித்த தோனி.. ஓய்வு குறித்த அறிவிப்பு எப்போது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.