கொல்கத்தா: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த 60வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்தன.
இதில் டாஸ் போடுவதற்கு முன்பே, மழை குறுக்கிட்டதால் 1.45 மணி நேரம் தாமதமாக இரவு 9.15 மணிக்கு போட்டி தொடங்கியது. மழை காரணமாக, 16 ஓவராக குறைக்கப்பட்டிருந்தது. இதில், முதல் 5 ஓவர் பவர்பிளேயாக இருந்தது. கொல்கத்தா அணியில் அங்கிரிஷ் ரகுவன்ஷிக்கு பதிலாக நிதிஷ் ராணா சேர்க்கப்பட்டிருந்தார். இதில், டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பீல்டிங்கை தேர்வு செய்தார்.
நுவன் தூஷாரா பந்து வீசிய நிலையில், முதலில் பேட்டிங்க் செய்த கொல்கத்தா அணியின் பில் சாட், 6 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். பின்னர் வந்த சுனில் நரின், பும்ரா வீசிய பந்தில் டக்-அவுட் ஆகினார். இவரைத்தொடர்ந்து அடுத்தடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா ஆகியோரின் ஜோடி ஸ்கோரை 77 ரன்கள் வரை கொண்டு சென்றது. இதற்கிடையே, பியுஷ் சாவ்லாவின் பந்து வீச்சில், வெங்கடேஷ் ஐயர் 21 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 42 ரன்களிலும் அவுட் ஆகினார்.
பின்னர் நிதிஷ் ராணா 23 பந்துகளில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 33 ரன்களை எடுத்திருந்த நிலையில், அவுட் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து வந்த ஆந்த்ரே ரஸ்செல் 14 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 24 ரன்களிலும், ரிங்கு சின் 12 பந்துகளில் 2 சிக்சர்கள் அடித்திருந்த நிலையில் 20 ரன்களும் என எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர், 16 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை குவித்திருந்தது. மும்பை அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, பியுஷ் சாவ்லா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் ஆகியோர் ஓரளவிற்கு நிதானமாக ஆடி 65 ரன்களை குவித்தனர். இதில், இஷான் கிஷன் 22 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 40 ரன்கள் குவித்தார். இந்நிலையில், ரிங்கு சிங்கிடம் இவர் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார்.
அடுத்து வந்த ரோகித் சர்மா, 22 பந்துகளில் ஒரு பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 19 ரன்னிலும், சூர்யாகுமார் யாதவ் 11 ரன்னிலும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 2 ரன்னிலும், டிம் டேவிட் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக, ஆட்டத்தின் முடிவில் வெற்றி பெற 22 ரன்கள் தேவைப்பட்ட போது, நமன் திர் 6 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர்கள் என 17 ரன்களைக் குவித்திருந்த நிலையில், ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த திலக் வர்மா 17 பந்துகளில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டமிழந்தார். பின்னர் ஹர்ஷித் ராணாவின் பந்து வீச்சில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கொல்கத்தா அணி 18ன் ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், 12வது ஆட்டத்தில் கொல்கத்தா அணி மீண்டும் மும்பை அணியை வீழ்த்தி 9வது வெற்றியை பெற்றது. இதன்மூலம், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதையும் படிங்க: மும்பை Vs கொல்கத்தா ஐபிஎல் கிரிக்கெட்: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்! - IPL 2024 KKR Vs MI Match Highlights