ETV Bharat / sports

ஐபிஎல் தொடரின் முதல் போட்டி;சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை..! - IPL CSK vs RCB

IPL 2024 CSK vs RCB: 17 வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - ராயல் சேலன்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது

CSK vs RCB 2024
CSK vs RCB 2024
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 9:19 AM IST

சென்னை: 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி மே 26ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன

இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை (CSK vs RCB) எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு இந்த போட்டியானது தொடங்கவுள்ளது. சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனால், சிஎஸ்கே ரசிகர்கள் சற்று வருத்தத்துடன் இருந்தாலும் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று மகேந்திர சிங் தோனி எடுத்த முடிவு எடுத்தாக கூறப்படுகிறது. இதனால், ருதுராஜ் கெய்க்வாட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதேபோல், அதிரடியாக பேட்ஸ்மேன்கள் மற்றும் நல்ல ஃபார்மில் உள்ள பந்து வீச்சாளர்கள் கொண்டுள்ள ஃபாஃப் டு ப்ளஸி தலைமையிலான ஆர்சிபி அணி இந்த சீசனில் எப்படியாவது கோப்பையை வென்று பெங்களூரு அணியை ரசிகர்களுக்கு விருந்து படைக்க வேண்டும் என்ற கனவோடு காத்துக்கொண்டு இருக்கிறது. அவர்களுக்கு இந்த 17வது சீசன் எப்படி அமையப் போகிறது என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.

மைதானம் எப்படி?: சிஎஸ்கே அணியின் ஹோம் கிரவுண்ட் சென்னை சேப்பாக்கம் மைதானம். இது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானதாகவும் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனால், இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யலாம் என எதிர்பார்க்கிறது.

2008 ஆம் ஆண்டு முதல் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கேஅணி ஆர்சிபியிடம் தோற்றாதே கிடையாது. இதனை எப்படியாவது முறியடித்துவிட வேண்டும் என ஆர்சிபி அணி வீரர்கள் கடுமையான சவாலை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இரு அணிகளும் இதுவரை விளையாடியுள்ள 31 ஆட்டங்களில், 20-ல் சென்னையும், 10-ல் பெங்களூ அணியும் வெற்றி கண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு 8 மணிக்கும் தொடங்கு இந்த போட்டி தொடங்கப்படுவதற்கு முன், கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. மாலை 6.30 மணிக்கு நடக்கும் தொடங்க விழாவில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இந்தி பாடகர் சோனு நிகாம், இந்தி நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷெராப் உள்ளிட்டோர் ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளனர்.

இதையும் படிங்க: Exclusive| "சிஎஸ்கே கேப்டனாக ருதுராஜை எதிர்பார்த்தோம்... ஆனால் இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கல"- ருதுராஜ் தந்தை பிரத்யேக பேட்டி! - CSK Captain Ruturaj Gaikwad

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.