ETV Bharat / sports

ஆசிய பேட்மிண்டன் போட்டி 2024; இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தல்..! - பிவி சிந்து

Badminton Asia Championships 2024: ஆசிய பேட்மிண்டன் போட்டியில் தாய்லாந்து அணியை 3-2 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி வீழ்த்தித் தங்கப் பதக்கத்தை வென்று உள்ளது.

Badminton Asia Championships 2024
ஆசிய பேட்மிண்டன் போட்டி 2024
author img

By PTI

Published : Feb 18, 2024, 2:57 PM IST

ஷா ஆலம்: ஆசிய பேட்மிண்டன் போட்டி மலேசியாவில் உள்ள சிலாங்கூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. பி.வி.சிந்து தலைமையிலான இந்திய மகளிர் அணி, தாய்லாந்து அணியை எதிர்த்து விளையாடியது.

முதலில், ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, சுபநிடா கேட்டோங் (Supanida Katethong) எதிர்த்து விளையாடினார். இதில் 21-12, 21-12 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.

பின்னர், இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி - காயத்ரி கோபி சந்த் (Treesa Jolly-Gayatri Gopichand) ஜோடி 21-16, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் ஜோங்கோல்பன் கிடிதரகுல்-ரவிந்த பிரஜோங்ஜாய் (Jongkolphan Kititharakul-Rawinda Prajongjai) ஜோடியை வீழ்த்தியது.

பின்னர், ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அஷ்மிதா சாலிஹா (Ashmita Chaliha), பூசனன் ஓங்பாம்ருங்பன்னிடம் (Busanan Ongbamrungphan) 21-11, 21-14 என்ற செட் கணக்கில் தோல்வியைச் சந்தித்தார்.

பின்னர், நடைபெற்ற இரட்டையர் பிரிவில் பிரியா கொஞ்ஜெங்பாம்-ஸ்ருதி மிஸ்ரா (Priya Konjengbam-Shruti Mishra) ஜோடி, பென்யபா ஐம்சார்ட்-நுண்டகர்ன் ஐம்சார்ட் (Benyapa Aimsaard-Nuntakarn Aimsaard) ஜோடியிடம் 21-11, 21-9 என்ற செட் கணக்கில் தோல்வியைச் சந்தித்தது.

இறுதியில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவில், அன்மோல் கர்ப் (Anmol Kharb) 21-14, 21-9 என்ற செட் கணக்கில் போர்ன்பிச்சா (Pornpicha Choeikeewong) வீழ்த்தினார். இதன் மூலம், இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி தாய்லாந்து அணியை வீழ்த்தி வரலாற்றில் முதன்முறையாக இந்திய மகளிர் அணி சாதனைப் படைத்துத் தங்கப் பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்; மீண்டும் அணிக்கு திரும்புகிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.