ETV Bharat / sports

பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: காலிறுதியில் சாத்விக்சாய் ராங்கி ரெட்டி - சிராக் செட்டி அதிர்ச்சி தோல்வி! - paris Olympics 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 5:45 PM IST

பாரீஸ் ஒலிம்பிக் ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய் ராங்கி ரெட்டி - சிராக் செட்டி இணை கால் இறுதியில் தோல்வியை தழுவி வெளியேறியது.

Etv Bharat
Satwik sairaj rankireddy and Chirag Shetty (AFP)

பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33வது ஒலிம்பிக் விளையாட்டு தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியின் கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக்சாய் ராங்கி ரெட்டி - சிராக் செட்டி இணை, மலேசியாவை சேர்ந்த ஆரோன் சியா மற்றும் சோ வூய் யிக் இணையை எதிர்கொண்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய இணை 21-க்கு 13, 14-க்கு 21 மற்றும் 16-க்கு 21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது.

தொடக்கத்தில் இரு போட்டியாளர்களிடையே கடும் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் 11-க்கு 10 என்ற கணக்கில் இரு தரப்பினரும் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். அதன்பின் சிறிய இடைவேளையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய இந்திய ஜோடி தொடக்க செட்டை 21-க்கு 13 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அதன்பின் சுதாரித்துக் கொண்ட மலேசிய ஜோடி இரண்டாவது செட்டில் இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. கடும் நெருக்கடிக்கு மத்தியில் விளையாடிய இந்திய இணையால் இரண்டாவது செட்டை கைப்பற்ற முடியவில்லை. இரண்டாவது செட்டை 14-க்கு 21 என்ற கணக்கில் மலேசிய வீரர்கள் கைப்பற்றினர்.

இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு தொற்றிக் கொண்டது. மூன்றாவது செட்டை கைப்பற்றினால் அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெறும் முனைப்புடன் இரு அணி வீரர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர். இறுதியில் மலேசிய ஜோடி 21-க்கு 16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. இந்த தோல்வியின் மூலம் இந்திய இணை அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இதையும் படிங்க: தோனியை போல் சாதித்த ஸ்வப்னில் குசலே... இரண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா? - Paris Olympics 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.