மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் முஷீர் கான் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதாகவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஷீர் கான்:
உத்தர பிரதேசம் மாநிலம் அசம்கர்கில் இருந்து லக்னோவுக்கு தனது தந்தை நவுசத் கானுடன் காரில் பயணித்துக் கொண்டு இருந்த நிலையில், முஷீர் கான் விபத்தில் சிக்கிக் கொண்டதாக சொல்லப்படுகிறது. எதிர்திசையில் வந்த வாகனத்துடன் மோதியதில் முஷீர் கான் பயணித்த கார் 4 அல்லது 5 முறை உருண்டி சாலையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். முஷீர் கான் காயத்தில் இருந்து பூரண குணமடைய 6 வாரம் முதல் 3 மாதங்கள் வரை ஆகலாம் என மருத்துவர்கள் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் லக்னோவில் நடைபெற உள்ள இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் அவர் விளையாட முடியாது.
Musheer Khan suffers a fracture in a road accident in UP. He's set to miss the Irani Cup and the initial phase of the Ranji trophy. (TOI).
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 28, 2024
- Wishing Musheer a speedy recovery! pic.twitter.com/lZaLJmjniC
இரானி கோப்பை கிரிக்கெட்:
அதேநேரம் முஷீர் கான் விபத்தில் சிக்கிக் கொண்டதால் அவருக்கு பதிலாக அணியில் வேறு யாருக்கும் இடம் அளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்னோவில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியில் முஷீர் கான் விளையட இருந்தது குறிப்பிடத்தக்கது.
காயம் காரணமாக முஷீர் கான் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக நட்சத்திர வீரர் அஜிங்கய ரஹானே மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உத்தர பிரதேசம் மாநிலம் குர்லா பகுதியைச் சேர்ந்த முஷீர் கான், முதல் தர கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்திய கிரிக்கெட் வீரரின் சகோதரர்:
நடப்பு சீசனில் முதல் தர கிரிக்கெட்டில் முஷீர் கான் 15 இன்னிங்ஸ்களில் விளையாடி 3 சதம், ஒரு சதம் என 716 ரன்கள் குவித்துள்ளார். இவரது சகோதரர் சர்பராஸ் கான் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிகெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இரானி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்த நிலையில் முஷீர் கான் விபத்தில் சிக்கி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 15 மணி நேரம் சைக்கிள் பயணம்! 7 மணி நேரம் போராடி கோலியை தேடி வந்த குட்டி ரசிகர்! - Virat Kohli 15 year fan