கொழும்பு: இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலன்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணியின் இன்னிங்சை பதுன் நிசன்கா மற்றும் அவிஸ்க பெர்னான்டோ ஆகியோர் தொடங்கினர்.
Washington Sundar 🤝 Riyan Parag
— BCCI (@BCCI) August 7, 2024
2⃣ more wickets for #TeamIndia! 👍 👍
Follow the Match ▶️ https://t.co/Lu9YkAmnek #SLvIND | @Sundarwashi5 | @ParagRiyan pic.twitter.com/NPGBg4ui1O
நிதனாமாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் குவித்தது. அக்சர் பட்டேல் பந்துவீச்சில் பதுன் நிசன்கா 45 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய விக்கெட் கீப்பர் குசல் மெண்டிஸ், மற்றொரு தொடக்க வீரர் பெர்னான்டோவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பிய இருவரும் நிதானமாக விளையாடி சீரான இடைவெளியில் ரன்களை குவித்தனர். சதத்தை நோக்கி சென்ற அவிஸ்க பெர்ன்னான்டோ 96 ரன்கள் எடுத்த நிலையில், ரியான் பராக் பந்துவீச்சில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். அதன் பின் இலங்கை அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழத் தொடங்கின.
கேப்டன் சரித் அசல்ன்கா 10 ரன்கள் மட்டும் எடுத்து வந்த வேகத்தில் ரியான் பராக பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆவுட்டாகி ஆட்டமிழந்தார். இதனிடையே சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடிய விக்கெட் கீப்பர் குசல் மெண்டிஸ் 59 ரன்கள் குவித்த கையோடு ஆட்டமிழந்து வெளியேறினார்.
Siraj with his first wicket of the match! 🙌 🙌#TeamIndia are on a roll here!
— BCCI (@BCCI) August 7, 2024
Follow the Match ▶️ https://t.co/Lu9YkAmnek #SLvIND | @mdsirajofficial pic.twitter.com/W3ut14AnLJ
அதன் பின் அடுத்தடுத்து இலங்கை வீரர்களின் விக்கெட்டுள் வீழ்ந்தன. சதீரா சமரவிக்ரமா டக் அவுட், ஜனித் லியங்கே 8 ரன், துனித் வெல்லலகே 2 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. கடைசி நேரத்தில் கமிந்து மெண்டிஸ் 23 ரன்கள் அடித்து அணி 250 ரன்களை நெருங்க உதவினார்.
இந்திய அணி தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து இந்திய அணி 249 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடி வருகிறது.
இதையும் படிங்க: நாடு திரும்பிய மனு பாக்கர் மீண்டும் பாரீஸ் பயணம்! என்ன காரணம் தெரியுமா? - Paris Olympics 2024