ஐதராபாத்: இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
முதல் பந்தே சிக்சர்:
இந்திய அணியின் இன்னிங்சை தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் தொடங்கினர். முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்ட ரோகித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு உறுதுணையாக மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால், வங்கதேச வீரர் ஹசன் மஹ்மூத் ஓவரில் அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகளை ஓடவிட்டார்.
This is some serious hitting by our openers 😳😳
— BCCI (@BCCI) September 30, 2024
A quick-fire 50-run partnership between @ybj_19 & @ImRo45 👏👏
Live - https://t.co/JBVX2gyyPf… #INDvBAN@IDFCFIRSTBank pic.twitter.com/1EnJH3X5xA
இதனால் 3 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை கடந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த பந்தில் 50 ரன்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. இதற்கு முன் இதே ஆண்டில் இங்கிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 4.2 ஓவர்களில் 50 ரன்களை கடந்ததே முந்தைய சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிவேக 50 ரன்:
அதற்கு முன்னரும் இதே இங்கிலாந்து அணி 1994ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4.3 ஒவர்களில் 50 ரன்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.
HISTORY WRITTEN BY ROHIT AND JAISWAL IN KANPUR. 🇮🇳
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 30, 2024
INDIA 51/0 IN JUST 3 OVERS - THE FASTEST EVER IN TEST CRICKET..!!! 🤯 pic.twitter.com/Pmgldc2jME
அதிவேக டெஸ்ட் அரை சதம்:
3 ஓவர்கள் - இந்தியா vs வங்களதேசம், 2024
4.2 ஓவர்கள் - இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், 2024
4.3 ஓவர்கள் - இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, 1994
5.0 ஓவர்கள் - இங்கிலாந்து vs இலங்கை, 2002
5.2 ஓவர்கள் - இலங்கை vs பாகிஸ்தான், 2004
அதிவேக 100 ரன்:
அதிவேக 50 ரன்களை தாண்டி இந்திய அணி மற்றொரு சாதனையையும் இன்றைய ஆட்டத்தில் படைத்துள்ளது. அதிவேகமாக 100 ரன்களை கடந்தும் இந்திய அணி புது மைல்கல் படைத்துள்ளது. இந்திய அணி 10.1 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. இதற்கு முன் 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 12.2 ஓவர்களில் 100 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது.
தற்போது தனது சொந்த சாதனையையே இந்தியா முறியடித்து புது வரலாறு படைத்துள்ளது. மேலும், ரோகித் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி 23 பந்துகளில் 50 ரன்களை கடந்தனர். இதன் மூலம் குறைந்த பந்துகளில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற சாதனையை இருவரும் படைத்தனர்.
🚨FASTEST 100 IN TEST CRICKET. 🚨
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 30, 2024
India beat their own record for the fastest 100 in Test cricket - 103/1 in just 10.1 overs. 🇮🇳 pic.twitter.com/JM0qbhPxyr
இதற்கு முன் இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் - பென் டக்கெட் ஜோடி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 44 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து குறைந்த பந்தில் அதிக பார்டனர்ஷிப் ரன் குவித்த ஜோடியாகும்.
இதையும் படிங்க: ஆசியாவிலேயே முதல் வீரர் ஜடேஜா! ஆனாலும் அஸ்வினை முந்த முடியல! - Jadeja 300 Wicket