ETV Bharat / sports

எமர்ஜிங் ஆசிய கோப்பை: யுஏஇ-யை துவம்சம் செய்த இந்தியா! அரையிறுதி வாய்ப்பு பிரகாசம் - EMERGING TEAMS ASIA CUP

வளர்ந்து வரும் வீரர்களுக்கான எமர்ஜிங் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் யுஏஇ அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியது இந்திய அணி.

மைதானம் தொடர்பான கோப்புப்படம்
மைதானம் தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2024, 10:55 PM IST

ஓமன்: ஆசிய நாடுகளைச் சேர்ந்த வளர்ந்து வரும் வீரர்களுக்கான எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடர் (Emerging Teams Asia Cup) டி20 கிரிக்கெட் வடிவத்தில் தற்போது ஓமன் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகள் ஏ மற்றும் பி என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்தியா, பாகிஸ்தான் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் ஆகியை குரூப் பி- பிரிவில் இடம் பெற்றுள்ளன. குரூப்-ஏ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்க தேசம், நேபாளம் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்த தொடரில் முதலாவதாக நடைபெறும் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒருமுறை மோதும்.

அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதனை தொடர்து இன்று நடைபெற்ற 2வது லீக் போட்டியில் யுஏஇ அணியை எதிர் கொண்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 16.5 ஓவர்கள் விளையாடிய அந்த அணி 107 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் ராகுல் சோப்ரா 2 பவுண்டரி 3 சிக்ஸர்கள் உள்பட 50 ரன்கள் விளாசினார். அவருக்கு அடுத்தபடியாக யுஏஇ கேப்டன் பசில் ஹமீத் 22 ரன் மற்றும் மயங்க் குமார் 10 ரன் எடுத்தார்கள்.

இதையும் படிங்க: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி த்ரில் வெற்றி! உலகக்கோப்பையை வென்ற நியூசிலாந்து!

மற்றும் பேட்ஸ்மேன்கள் யாரும் ஒற்றை இலக்கை ரன்களை தாண்டவில்லை. இந்திய பந்துவீச்சு தரப்பில் ராசிக் சலாம் மூன்று மற்றும் ரமன்தீப் ப் சிங் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். இதனையடுத்து 108 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக பிரப்சிம்ரன் சிங் - அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.

இதில் 8 ரன்கள் எடுத்து பிரப்சிம்ரன் சிங் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து விளையாட வந்த கேப்டன் திலக் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் தரமாக விளையாடிய அபிஷேக் சர்மா 20 பந்தில் அதிரடியாக அரைசதம் அடித்தார். 24 பந்துகள் எதிர்கொண்ட அவர் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதனால் 10.5 ஓவர்களில் 111 ரன்கள் குவித்து இலக்கை எட்டிய இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேஹால் வதேரா 6 ரன்களுடனும், ஆயுஷ் படோனி 12 ரன்களுடனும் களத்திலிருந்தனர். இந்திய அணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதம், இந்த வெற்றியின் மூலம் ஏறக்குறைய அரை இறுதி எட்டிவிட்டது என்று கூறலாம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.