ETV Bharat / sports

டி20 உலகக்கோப்பை; மழை குறுக்கிட்டால் இந்தியா பைனலுக்குள் நுழையுமா? - T20 WORLD CUP 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 4:38 PM IST

IND Vs ENG: டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் சூப்பர் 8 சுற்றில் அதிக புள்ளிகளைப் பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும்.

ரோஹித் சர்மா மற்றும் ஜோஸ் பட்லர்
ரோஹித் சர்மா மற்றும் ஜோஸ் பட்லர் (Credits-AP Photos)

சென்னை: டி20 உலகக் கோப்பையின் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் விளையாடிய முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது. இந்நிலையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இன்று இந்தியா, இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இரு சமபலம் வாய்ந்த அணிகள் அரையிறுதிப் போட்டியில் மோதுவதால் ரசிகர்கள் போட்டியை காண ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில், போட்டி நடைபெறவுள்ள கயானாவில் மழை பெய்ய 80 சதவீதம் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மழை காரணமாக இந்திய அணி நேற்றைய பயிற்சியையும் கைவிட்டது. இந்த போட்டிக்கு ரிசர்வ் டே வழங்கப்படவில்லை. ஏனெனில், இந்த போட்டி கயானாவின் உள்ளூர் நேரப்படி 27ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. ஒருவேளை இந்த போட்டிக்கு ரிசர்வ் டே கொடுக்கப்பட்டால், போட்டி 28ஆம் தேதியில் நடைபெறும். இதில் சிக்கல் என்னவென்றால், இந்தியா, இங்கிலாந்து போட்டியில் வெல்லும் அணி இடைவெளி எதுவும் இல்லாமல் 29ஆம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பங்கேற்கும் நிலை ஏற்படும்.

இந்தியா - இங்கிலாந்து போட்டி உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், கூடுதலாக 250 நிமிடங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் இரு அணிகளும் குறைந்தபட்சம் 10 ஒவர்களாவது ஆடியிருக்கும் பட்சத்தில், டக்வொர்த் லீவீஸ் முறையைப் பின்பற்றி இறுதி முடிவு அறிவிக்கப்படும். கூடுதல் 250 நிமிடங்களைப் பயன்படுத்தியும் மழையால் போட்டி நடக்கமுடியாத பட்சத்தில், சூப்பர் 8 சுற்றில் அதிக புள்ளிகளை பெற்றிருக்கும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இதன்படி, இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

இதையும் படிங்க: 2022 தோல்விக்கு பழிதீர்க்குமா அல்லது இங்கிலாந்து வெற்றி தொடருமா... அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.