ETV Bharat / sports

ஆனந்தக் கண்ணீர் கடலில் வினேஷ் போகத்! காரில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து சென்று கொண்டாடிய ரசிகர்கள்! - VINESH PHOGAT

டெல்லி திரும்பிய இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கண்ணீர் மல்க ரசிகர்களின் பேரன்பை வினேஷ் போகத் ஏற்றுக் கொண்டார்.

Etv Bharat
Vinesh Phogat (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 17, 2024, 1:09 PM IST

டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இன்று நாடு திரும்பினார். காலை 10.30 மணிக்கு டெல்லி விமான நிலையம் வந்த அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் பஜ்ரங் பூனியா, சாக்‌ஷி மாலிக் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வினேஷ் போகத்தை வரவேற்றனர்.

விமான நிலையத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மேள தாளங்கள் முழங்க கோஷங்கள் எழுப்பி வினேஷ் போகத்தை கொண்டாடி தீர்த்தனர். தொடர்ந்து திறந்தவெளி காரில் தோன்றிய வினேஷ் போகத், ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். நண்பர்கள் பஜ்ரங் பூனியா, சாக்‌ஷி மாலிக் உறவினர்களுடன் திறந்த வெளி காரில் பயணித்த வினேஷ் போகத் கண்ணீர் மல்க அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய வினேஷ் போகத், ஒட்டுமொத்த உலகத்திற்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். தொடர்ந்து பேசிய சாக்‌ஷி மாலிக், நாட்டுக்கான பணியை வினேஷ் நிறைவேற்றி உள்ளார். வெகு சிலருக்கு மட்டுமே நாட்ட்டை பெருமைப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். அவருக்கான மரியாதையை நாம் வழங்க வேண்டும் என்று கூறினார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிர் மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் கலந்து கொண்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னதாக குறிப்பிட்ட எடையை காட்டிலும் 100 கிராம் அதிகமாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தை நாடினார்.

ஆனால் தகுதி நீக்கத்திற்கு எதிராக வினேஷ் போகத் தாக்கல் செய்த மனுவை சர்வதேச விளையாட்டுக்கான நீதிமன்றம் நிராகரித்தது. இருப்பினும், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டுமென நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டார். இதை முதலில் ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், விரைவில் தீர்ப்பை வெளியிடுவதாக அறிவித்தது.

தொடர்ந்து மூன்று முறை மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இறுதியில் வினேஷ் போகத்திற்கு வெள்ளிப் பதக்கம் வழங்கும் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. முன்னதாக மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "பெண்களுக்காக போராடினேன்.. 2032 வரை விளையாடுவேன் என நினைத்தேன்" - மனம் திறந்த வினேஷ் போகத்! - Vinesh Phogat

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.