ETV Bharat / sports

வெள்ளி வென்ற அடுத்த கணமே வந்த கால்.. கால்நடை மருத்துவரின் பாராலிம்பிக்ஸ் கனவு சாத்தியமானது எப்படி? - Thulasimathi Murugesan

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 4, 2024, 8:55 AM IST

Updated : Sep 4, 2024, 1:44 PM IST

Thulasimathi Murugesan: “எனக்கு உடம்பு சரியில்லை, என்னால் தங்கப் பதக்கம் வெல்ல முடியவில்லை” என போனில் தெரிவித்தபோது, சீன மண்ணிலே தங்கத்தை வென்ற எனது மகள் துளசிமதி, அடுத்த பாராலிம்பிக்ஸ் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வார் என அவரது தந்தை முருகேசன் ஈடிவி பாரத் வாயிலாக உறுதிபட தெரிவித்தார்.

துளசிமதி முருகேசன்
துளசிமதி முருகேசன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: “பாராலிம்பிக்ஸில் எனது மகள் வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு என்னிடம் தொலைபேசியில் பேசினார். அப்போது என்னால் தங்கப் பதக்கத்தை வெல்ல முடியவில்லை, ஆனால், நிச்சயமாக அடுத்த முறை தங்கப் பதக்கம் வெல்வேன்” என்று சொன்னதாக கூறிய சீன வீராங்கனை யாங் கியூ ஷியாவிடம் இறுதிப் போட்டியில் மோதிய துளசிமதி முருகேசனின் தந்தை, “அவர் பயமில்லாமல் விளையாடி இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்” என ஈடிவி பாரத்திடம் பூரிப்புடன் கூறினார்.

துளசிமதியின் தந்தை முருகேசன் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம், பழைய ரயில் நிலையம் அருகே வசித்து வரும் இவர் தான், கால்நடை மருத்துவப் படிப்பை படித்து வருகிறார். இதனிடையே, தனது விடாமுயற்சி மற்றும் பயிற்சியின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றிருந்தார். எனவே, “ஏற்கனவே ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனாவுக்கே சென்று அவர்களது மண்ணில் தங்கப் பதக்கத்தை வென்றார் எனது மகள். எனவே, அடுத்த முறை நிச்சயம் தங்கம் வெல்வார்” என உறுதிபடக் கூறினார் முருகேசன்.

ஆனால், ஒரு மருத்துவப் படிப்பை மேற்கொள்ளும் பெண், இடையிடையே பயிற்சியில் ஈடுபட்டு பாராலிம்பிக்ஸ் வரை சென்று, பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருப்பது தமிழ்நாடு அரசின் மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் முழு முயற்சி என்கிறார் முருகேசன்.

காரணம், “கால்நடை மருத்துவம் படித்து வரும் எனது மகளுக்கு விடுப்பு எடுக்க முடியாது. இருந்தாலும், தமிழ்நாடு அரசின் மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலரைத் தொடர்பு கொண்டு இது குறித்து பேசினேன். உடனடியாக, அவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து, எனது மகளையும் வைத்துக் கொண்டே 45 நாட்கள் விடுப்பு மற்றும் பயிற்சி குறித்து முறையிட்டார். பின்னர், மிகவும் விறுவிறுப்பாக என் மகள் கேட்ட விடுப்பு வழங்கப்பட்டது. இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். இந்த நன்றியை பதக்கம் வென்ற மறுநிமிடம் பேசிய 22 வயதான துளசிமதியும் நினைவு கூர்ந்தார் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தான், துளசிமதி முருகேசன் உள்பட 6 வீரர், வீராங்கனைகள் 2 ஆண்டுகால ஒப்பந்தத்துடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ELITE திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, பாராலிம்பிஸ் வீரர், வீராங்கனைகளான துளசிமதி முருகேசன், மாரியப்பன் தங்கவேலு, ராஜேஷ் ரமேஷ், வித்யா ராமராஜ் மற்றும் பிருத்விராஜ் தொண்டைமான் ஆகியோரும், செஸ் வீராங்கனை வைஷாலியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, அவர்களின் பயிற்சி மற்றும் உபகரணத் தேவைகளுக்காக ஆண்டுக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

மேலும், முருகேசன் ஒரு தந்தையாக மட்டுமல்லாது, சிறந்த பயிற்சியாளராகவும் துளசிமதிக்கு துணிவைக் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “விளையாட்டு நேரத்தில் பயிற்சியாளராகவும், மற்ற நேரத்தில் அம்மாவாகவும் அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளேன். அவருக்கு சிறு வயதில் இருந்தே நான் பேட்மிட்டன் விளையாடிற்கு பயிற்சி கொடுத்து வந்துள்ளேன். எங்களது வீட்டுக்கு அருகாமையில் மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளதால் அங்கு சிறு வயதில் இருந்து அவருக்கு நான் பயிற்சி கொடுத்து வருகிறேன்” என்கிறார்.

இந்த இடத்தில் தான் ஒரு பொதுப்படையான கேள்வி தோன்றலாம். அது, சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்ட துளசிமதி, கால்நடை மருத்துவப் படிப்பை சாத்தியமாக்கியது எப்படி என்பது. அதற்கு துளியும் சிந்திக்காமல் பதிலளித்த முருகேசன், “நன்றாக படிக்கக்கூடிய மாணவர்கள் தான் விளையாட்டிலும் நன்றாக விளையாடுவார்கள். அதிலும், விளையாட்டில் தந்திரமாகவும், நுட்பமாகவும் செயல்பட வேண்டியது முக்கியம். இவை அனைத்தையும் துளசிமதி சாத்தியமாக்கி காட்டியவர்” என பெருமிதம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீராங்கனைகள் பதக்க வேட்டை!

Last Updated : Sep 4, 2024, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.