ETV Bharat / sports

சிஎஸ்கே-வால் தோனிக்கு வரப்போகும் நஷ்டம்! அன்கேப்ட் பிளேயர் என்றால் என்ன? - Dhoni Lose in CSK - DHONI LOSE IN CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அன்கேப்ட் வீரராக மகேந்திர சிங் தோனி தக்கவைக்கப்பட்டால் அவர் எவ்வளவு தொகை வருவாயை இழப்பார் என இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

Etv Bharat
MS Dhoni (BCCI)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 21, 2024, 6:17 PM IST

ஐதராபாத்: 2025 ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை நடைபெறும் ஏலத்தில் 10 அணிகளிலும் பெrரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் தோனியை அன்கேப்ட் வீரராக தக்கவைக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேநேரம் இந்திய அணிக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் தோனியை அன்கேப்ட் வீரராக அணியில் தக்கவைக்க ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என பிசிசிஐயின் அறிவிக்கும் பின் தோனியில் நிலை தெரியவரும் எனக் தகவல் கூறப்படுகிறத்.

அன்கேப்ட் பிளேயர் என்றால் என்ன?:

அன்கேப்ட் பிளேயர் என்பது ஒரு வீரர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் சர்வதேச அணியில் இடம் பெறாத பட்சத்தில் அவரை அன்கேப்ட் பிளேயராக அணியில் தக்கவைத்துக் கொள்ள பிசிசிஐயின் விதிமுறைகள் அனுமதிக்கிறது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பிசிசிஐயின் இந்த விதிமுறை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில் அண்மையில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணி உரிமையாளர்களிடையே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அன்கேப்ட் வீரர்கள் தக்கவைப்பு விதிமுறையை நீக்கக் கோரப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் தனிப்பட்ட முறையில் அன்கேப்ட் விதிமுறையை அம்லபடுத்த பிசிசிஐயை அறிவுறுத்தியதாக தகவல் பரவியது. இருப்பினும் இந்த விவகாரத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் மறுத்தார்.

சென்னை அணியில் தோனி?

ஒவ்வொரு ஐபிஎல் அணியும் 5 வீரர்களை தக்கவைப்பது போக அன்கேப்ட் வீரர்களை தக்கவைக்க அனுமதிக்கும் பட்சத்தில் சென்னை அணியில் தோனி, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, மதிஷா பத்திரனா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்கவைக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

அதேநேரம் 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க பிசிசிஐ அனுமதி அளிக்கும் பட்சத்தில் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மதிஷா பத்திரனா ஆகியோர் மட்டும் அணியில் தக்கவைக்க முடியும் என்ற சூழல் நிலவுவதால், அன்கேப்ட் முறையை மீண்டும் கொண்டு வர சென்னை அணி நிர்வாகம் பிசிசிஐயை வலியுறுத்தியதாக தகவல் சொல்லப்படுகிறது.

தோனிக்கு எத்தனை கோடி நஷ்டம்:

ஒரு வீரர் இந்திய அணியில் 5 ஆண்டுகளாக விளையாடாத பட்சத்தில் அவரை அன்கேப்ட் பிளேயராக கருத்தில் கொள்ள முடியும். அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்று ஐந்து ஆண்டுகளாகும் நிலையில், அவரை அன்கேப்ட் பிளேயராக எடுத்துக் கொண்டு அவர் இடத்தில் மற்றொரு வீரரை சென்னை அணி தக்க வைக்க முடியும்.

முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் மகேந்திர சிங் தோனி 12 கோடி ரூபாய்க்கு சென்னை அணி சார்பில் தக்கவைக்கப்பட்டார். அதேநேரம் அன்கேப்ட் பிளேயராக ஒருவர் தக்கவைக்கப்படும் போது அவருக்கு அதிகபட்சமாக 4 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்தால் போது என விதி கூறுகிறது. இதனால் தோனி ஏறத்தாழ 8 கோடி ரூபாயை அன்கேப்ட் பிளேயராக தக்கவைக்கப்பட்டால் இழக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிஎஸ்கேவில் ரிஷப் பன்ட்? இன்ஸ்டா போஸ்ட் மூலம் உறுதிப்படுத்திய பன்ட்? தோனி ஸ்டைலில் தலைவர் போஸ்ட்! - IPL Auction 2025

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.