ஐதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் தூண்களில் ஒருவர் ரோகித் சர்மா. அதிரடி பேட்டிங் ஸ்டைல், சிறந்த தலைமை பண்பு உள்ளிட்டவற்றின் மூலம் இந்திய அணியின் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவராக இருக்கிறார். ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களும் தங்களது போட்டிக் கட்டணம் மட்டுமின்றி விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு வகையில் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
இதில் ஒவ்வொரு வீரரின் பிராண்ட் மதிப்புக்கு ஏற்றபடி விளம்பரங்கள், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வாங்கப்படும் தொகையும் வித்தியாசப்படும். அந்த வகையில் ரோகித் சர்மா தனது பேட்டில் சியட் நிறுவனத்தின் ஸ்டிக்கரை ஒட்டி அந்நிறுவனத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்.
கடந்த 2015ஆம் ஆண்டு சியட் நிறுவனம் ரோகித் சர்மாவுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. அதன்படி மூன்று ஆண்டுகள் ரோகித் சர்மா தனது பேட்டில் சியட் நிறுவனத்தின் விளம்பர ஸ்டிக்கரை ஒட்டி உள்ளார். அதன்பின், கடந்த 2018ஆம் ஆண்டு சியட் நிறுவனம் ரோகித் சர்மாவுடனான ஒப்பந்தத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு உயர்த்தியது.
கிரிக்கெட் பேட்டில் சியட் நிறுவனத்தின் ஸ்டிக்கரை ஒட்டுவதன் மூலம் ரோகித் சர்மா ஆண்டுக்கு 4 கோடி ரூபாய் வரை பணம் பெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி 2015ஆம் ஆண்டு சியட் நிறுவனத்துடன் போடுக் கொண்ட ஒப்பந்தத்தின் கீழ் ரோகித் சர்மா 3 ஆண்டுகளில் 12 கோடி ரூபாயை ஸ்பான்ஷர்ஷிப் தொகையாக பெற்று உள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்தமாக ஆறு ஆண்டுகளில் ரோகித் சர்மா சியட் நிறுவனத்திடம் இருந்து 24 கோடி ரூபாயை ஸ்பான்ஷர்ஷிப் தொகையாக பெற்றுக் கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னர் கூறியது போது ஒவ்வொரு வீரரின் பிராண்ட் மதிப்புக்கு ஏற்றார் போல் இந்த தொகை அதிகரிக்கும் நிலையில், ரோகித் சர்மாவை விட விராட் கோலி அதிக தொகை பெறுவதாக ஆச்சரியத் தகவலும் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் விராட் கோலி, எம்ஆர்எப் நிறுவனத்துடன் பேட் ஸ்பானஷர்ஷிப் ஒப்பந்தம் போட்டுள்ளார். அதன்படி விராட் கோலிக்கு ஆண்டுக்கு 12 கோடியே 50 லட்ச ரூபாய் வீதம், 8 ஆண்டுகளுக்கு பேட் ஸ்பான்ஷர்ஷிப்பிற்காக எம்ஆர்எப் நிறுவனம் ஒப்பந்தம் போட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என்ன மனுசன்யா... இணையத்தில் வைரலாகும் ஸ்ரேயாஸ் ஐயர் வீடியோ! - Shreyas Iyer Viral Video