ETV Bharat / sports

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்: தமிழக வீரர்கள் அசத்தல்!

நெதர்லாந்து டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர்கள் பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2024, 9:49 PM IST

Updated : Jan 22, 2024, 5:44 PM IST

Etv Bharat
Etv Bharat

விஜ்க் ஆன் ஜீ : நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் அபார வெற்றி பெற்றார்.

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 6வது சுற்றில் தமிழக வீரர் குகேஷ், ஹாலந்து வீரர் ஜோர்டன் வேன் பாரஸ்ட் என்பவரை எதிர்கொண்டார். கருப்பு காய்களுடன் களமிறங்கிய குகேஷ் தனது நேர்த்தியான காய் நகர்த்தலின் மூலம் ஜோர்டன் வேன் பாரஸ்ட்டை வீழ்த்தினார்.

முன்னதாக 5வது சுற்றில் ரஷ்ய வீரர் இயன் நெபோம்னியாச்சியை தமிழக வீரர் குகேஷ் வீழத்தி இருந்தார். இந்த வெற்றியின் மூலம் குகேஷ் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 3வது இடத்தை பிடித்தார். மற்றொரு தமிழக வீரர் பிரக்ஞானந்தா, அதே ரஷ்ய வீரார் இயன் நெபோம்னியாச்சிக்கு எதிரான ஆட்டத்தில் சமன் செய்தார்.

மொத்தம் ஏழு சுற்றுகளை கொண்ட டாடா ஸ்டீஸ் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், உள்ளூர் வீரர் அனிஷ் கிரி 4 புள்ளி 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிரான்ஸ் வீரர் பிரோசா அலிரெஸா 4 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்திய வீரர்களில் பிரக்ஞானந்தா, குகேஷ் மற்றும் உஸ்பெகிஸ்தான் வீரர் Nodirbek Abdusattarov, ஹாலந்து வீரர் மேக்ஸ் வேர்மர்டாம் ஆகியோர் தலா 3புள்ளி 5 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க : ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் - மீண்டும் தக்கவைத்த டாடா குழுமம்.. எத்தனை கோடிக்கு தெரியுமா?

Last Updated : Jan 22, 2024, 5:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.